• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்த 3 ஐபிஎல் சாதனைகளை யாராவது உடைக்க முடியுமா?

இந்த 3 ஐபிஎல் சாதனைகளை யாராவது உடைக்க முடியுமா?

யுவ்ராஜ் சிங்.

யுவ்ராஜ் சிங்.

ஐபிஎல் 2021 தொடர் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் மூன்று மேஜர் சாதனைகளை யாராலும் உடைக்க முடியுமா என்ற சவால் எழுந்துள்ளது. அந்த 3 சாதனைகள் என்னவென்று பார்ப்போம்.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடர் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் மூன்று மேஜர் சாதனைகளை யாராலும் உடைக்க முடியுமா என்ற சவால் எழுந்துள்ளது. அந்த 3 சாதனைகள் என்னவென்று பார்ப்போம்.

    வரும் ஞாயிறன்ரு 14வது ஐபிஎல் தொடரின் மீதிப் போட்டிகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடக்கும் போட்டி மூலம் தொடங்குகிறது. யாரும் உடைப்பதற்கு மிக மிகக் கடினமான இந்தச் சாதனைகள் என்னவென்பது அரிய ஆவலாக இருக்கிறதா?

    1. கிங் கோலி ஒரே சீசனில் எடுத்த 973 ரன்கள்:

    விராட் கோலி ஐபிஎல் கோப்பையை ஒருமுறை கூட வெல்லாவிட்டாலும் 2016 ஐபிஎல் தொடர் அவருக்கு ஒரு கனவு தொடராகும். அந்தத் தொடரில் விராட் கோலி மட்டும் 973 ரன்களை விளாசினார். கிட்டத்தட்ட ஆயிரம் ரன்கள் என்ற மலையைத் தொட்டிருப்பார். இதில் சாதனையான 4 சதங்கள் அடித்தார், இறுதி வரை ஆர்சிபியைக் கொண்டு சென்றார். இந்தச் சாதனையை இனி கோலியே நினைத்தாலும் உடைக்க முடியாது, ரன் மெஷின் சாதனையை எப்படி உடைக்க முடியும்? அப்படி யாராவது உடைத்தால் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் பெரிய ஆளாக இருக்க வேண்டும், அப்படிப்பட்டவரே உடைக்க முடியும். இதுவரை கோலியைத்தாண்டி யாரும் இந்தச் சாதனையை உடைக்க கண்களுக்குத் தெரியவில்லை.

    கோலி


    2. 2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெய்ல் புயல்:

    எந்த ஒரு பெரிய பவுலிங் அட்டாக்கிற்கும் நடமாடும் சிம்மசொப்பனம் ஒருவர் உண்டு என்றால் அது யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல்தான். 2013-ம் ஆண்டு சர்ச்சைகள், சூதாட்ட மோசடிகள் புகார்கள் எழுந்த ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 175 ரன்களை விளாசியது மறக்க முடியாதது என்பதை விட உடைக்கவும் முடியாதது. பிரெண்டன் மெக்கல்லம் முதல் ஐபிஎல் தொடரில் விளாசிய 158 ரன்களை கெய்ல் உடைத்தார், ஆனால் கெய்லை உடைக்க ஆளில்லை. ஐபிஎல் வரலாற்றில் அதிவிரைவு சதமானதுடன் அதிகபட்ச ஸ்கோராகவும் மாறியது. 66 பந்துகள் தான் ஆடினார் 175 ரன்களுக்கு.

    கிறிஸ் கெயில்


    3. யுவராஜ் சிங்கின் இரட்டை ஹாட்ரிக் சாதனை:

    யுவ்ராஜ் சிங்.


    யுவராஜ் சிங் 6 சிக்சர்களை 2007 டி20 உலகக்கோப்பையில் ஒரே ஓவரில் விளாசி சாதித்தவர், தோனி இவரை பவுலிங்கிலும் பிரமாதமாகப் பயன்படுத்தி 2011 உலகக்கோப்பையை வென்றார். இதே யுவராஜ் பிரதானமாக பவுலராகவே உள்ளே நுழைந்தார், இவர் ஐபிஎல் கிரிக்கெட்டின் ஒரே தொடரில் 2 ஹாட்ரிக் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 2009 எடிஷனில் ஆர்சிபி அணிக்கு எதிராக 3/22 என்று ஹாட்ரிக் எடுத்த யுவராஜ் அதே தொடரில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக பஞ்சாப் பெற்ற த்ரில் 1 ரன் வெற்றியில் ஹாட்ரிக் சாதனை புரிந்து ஒரே ஐபிஎல் தொடரில் 2 ஹாட்ரிக் சாதனை புரிந்த ஒரே வீரர் ஆவார். இந்தச் சாதனையை உடைப்பதும் கடினம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: