• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்... எந்தெந்த அணிகள் மோதல்?

ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்... எந்தெந்த அணிகள் மோதல்?

IPL 2021

IPL 2021

ஐபிஎல் 2021 தொடரில் டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடர் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு அதன் 2-ம் பாதி கடந்த செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்கியது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள்  நிறைவுபெற்ற நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடத்தை பிடித்த டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    ப்ளே ஆப் சுற்றில் மொத்தம் 3 போட்டிகள் நடைபெறும். அதன்படி புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி - சிஎஸ்கே அணி அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும் முதல் குவாலிஃபையரில் மோதும். இந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும். அடுத்த 2 இடங்களை பிடித்த பெங்களூரு - கொல்கத்தா அணிகள் அக்டோபர் 11-ம் தேதி நடைபெறும் எலிமேனேட்டர் போட்டியில் மோதும்.

    இதையடுத்து அக்டோபர் 13-ம் தேதி நடைபெறும் போட்டியில் 2-வது குவாலிஃபையர் போட்டியில் முதல் குவாலிஃபையரில் தோல்வியடைந்த அணியும் எலிமினேட்டர் போட்டியில் வென்ற அணியும் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறும். அக்டோபர் 15-ம் தேதி நடைபெறும் ஐபிஎல் 2021 சுற்றின் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: