முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐ.பி.எல் 2020 : சி.எஸ்.கே முதல் தோல்வி... நூலிழையில் தவறிய இமாலய சாதனை

ஐ.பி.எல் 2020 : சி.எஸ்.கே முதல் தோல்வி... நூலிழையில் தவறிய இமாலய சாதனை

CSKvsRR

CSKvsRR

IPL 2020 : 2018ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையிலான போட்டியில் 33 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐபிஎல் 2020 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இரு தரப்பினரும் மொத்தமாக 33 சிக்ஸர்களை விளாசியுள்ளனர்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 வது சீசன் 2020 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்தது. இரண்டு அணியினரும் மொத்தம் 33 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

33 சிக்ஸர்களில்,சஞ்சு சாம்சன் - 9, பேஃப் டு பிளெசிஸ் - 7, எம்.எஸ். தோனி - 3, சாம் குர்ரான் -2 மற்றும் தலா நான்கு சிக்சர்களை ஸ்டீவ் ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர், மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் அடித்து பட்டையை கிளப்பினர். ஆனால் ஐபிஎல் போட்டியில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான சிக்ஸர் மழை பொழிந்தது இது முதல் முறை அல்ல.

2018ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையிலான போட்டியில் 33 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தனர். நேற்றையப் போட்டியில் மேலும் ஒரு சிக்ஸர் அடிக்கப்பட்டிருந்தால் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய போட்டி இதுவாக அமைந்திருக்கும். ஆனால் அந்த சாதனை நேற்றையப் போட்டியில் நூலிழையில் தவறிவிட்டது.

2018-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு போட்டியில் மொத்தம் 31 சிக்ஸர்களை அடித்தனர் ஐ.பி.எல்  11வது சீசனில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என மொத்தம் 31 சிக்ஸர்களை அடித்தனர். 2017ம் ஆண்டில், டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் இடையேயான ஒரு போட்டியில் 31 சிக்சர்களை பெற்றனர்.

MOST SIXES:

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 216 ரன்கள் எடுத்தது. சாம்சன் மற்றும் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் இருந்து சூப்பர் இன்னிங்ஸ் விளையாடினர். சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்களும், ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்களும் எடுத்தனர்.

ஆர்ச்சர் எட்டு பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்கோர்போர்டில் 200 ரன்கள் எடுத்தது. எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சி.எஸ்.கேவில் இருந்து, டு பிளெசிஸ் 37 பந்துகளில் 72 ரன்களும், வாட்சன் 21 ரன்களில் 33 ரன்களும், தோனி 17 ரன்களில் 29 ரன்களும் எடுத்தனர்.

PURPLE CAP:

இந்த ஆட்டத்திற்கு முன்பு தோனி தலைமையிலான சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸை நான்கு பந்துகள் மீதமுள்ள நிலையில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸுக்கு இது சீசனின் முதல் ஆட்டமாகும்.

இதனை தொடர்ந்து செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாபை எதிர்கொள்ளும், சென்னை சூப்பர் கிங்ஸ் செப்டம்பர் 25ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணி உடன் மோத உள்ளது.

First published:

Tags: CSK, IPL 2020