விளையாட்டு

  • associate partner

IPL 2020 | ரன்னிங்கில் பறந்து டைவ் அடித்து அசாதாரணமாக பந்தைப் பிடித்த ஐபிஎல் வீரர்கள்.. (வீடியோ)

நடப்பு ஐபிஎல் தொடரில் வீரர்கள் அந்தரத்தில் பறந்து அசாதாரணமாக பந்தை பிடித்து தெறிக்க விட்ட காட்சிகள் ஐபிஎல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

IPL 2020 | ரன்னிங்கில் பறந்து டைவ் அடித்து அசாதாரணமாக பந்தைப் பிடித்த ஐபிஎல் வீரர்கள்.. (வீடியோ)
ஐபிஎல்
  • News18 Tamil
  • Last Updated: November 11, 2020, 12:09 PM IST
  • Share this:
கொரோனோ கால ஊரங்கிற்கு இடையில் ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததால் வீரர்கள் நீண்ட ஓய்விற்கு பிறகு கிரிக்கெட் விளையாடினர். பயிற்சி இல்லாமல் சில வீரர்கள் களமிறக்கப்பட்டதால் ஃபீல்டிங்கில் சொதப்பி வந்தனர். பிறகு சூடுபிடிக்க ஆரம்பித்த கொரோனோ கால ஐபிஎல் தொடரில் வீரர்கள் அந்தரத்தில் பறந்து வித்தை காட்ட தொடங்கினர்.

ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்ஷன் அடித்த சிக்ஸை பஞ்சாப் வீரர் பூரன் அந்தரத்தில் பறந்து தடுத்தது நடப்பு தொடரின் சிறந்த ஃபீல்டிங்காக கொண்டாடப்படுகிறது.

அத்துடன் ஹைதராபாத் அணிக்கு எதிராக ரன்னிங்கில் பறந்து பூரன் பிடித்த கேட்ச் ஹைதராபாத் அணியின் வெற்றியை பறித்தது.


  மும்பை அணி வீரர் இஷான் கிஷன் அடித்த பந்தை ஹைத்ராபாத் வீரர் மனிஷ் பாண்டே டைவ் அடித்து அற்புதமாக கேட்ச் பிடித்து அதிர்ச்சி அளிப்பார். ஐபிஎல் தொடரில் பிடிக்கப்பட்ட சிறந்த கேட்ச் பட்டியலில் இந்த கேட்ச் இடம் பிடித்துள்ளது.  அதே போல் மும்பை அணி வீரர் திவாரியை தனது அசாத்திய திறமையால் அந்தரத்தில் டைவ் அடித்து கேட்ச் பிடித்து வெளியேற்றுவார் படிக்கல்.

  

சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறமுடியவில்லை என்றாலும் ஃபீல்டிங்கில் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர். சி.எஸ்.கே வீரர்கள். வயதான அணி என கிண்டல் செய்யப்பட்டாலும் டு பிளஸி சிக்ஸ் லைனில் பிடித்த கேட்ச் என்றும் ரசிகர்கள் மனதில் இருந்து விலகாத கேட்சாக மாறியது.

  கீப்பிங்கில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கை பார்க்கமுடியாத ரசிகர்களுக்கு தனது அற்புதமான டைவ் மூலம் கேட் பிடித்து ஆறுதல்படுத்தினார் கூல் கேப்டன் தோனி.

  

அதே போல் உலகின் தலைசிறந்த ஃபீல்டரான ஜடேஜா சிக்ஸ் லைனில் சறுக்கியே வந்து பிடித்த கேட்ச் நடப்பு தொடரின் தலைசிறந்த கேட்ச் பட்டியிலில் இடம்பிடித்துள்ளது
First published: November 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading