விளையாட்டு

  • associate partner

ஐ.பி.எல் 2020 : பஞ்சாப் அணியை பழிதீர்க்குமா பெங்களூரு..?

IPL 2020 | பஞ்சாப் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் இன்றைய போட்டியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல் 2020 : பஞ்சாப் அணியை பழிதீர்க்குமா பெங்களூரு..?
KXIPvsRCB
  • Share this:
நடப்பு தொடரின் 31 ஆவது லீக் போட்டி சார்ஜா மைதானத்தில் இரவு ஏழு முப்பது மணிக்கு நடைபெற உள்ளது. இதில் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்புள்ள பெங்களூரு அணியும் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன.

பெங்களூரு அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தையும் சார்ஜா மைதானத்தில்தான் விளையாடியது. கொல்கத்தாவுக்கு எதிரான அந்தப் போட்டியில் டிவில்லியஸ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். மறுமுனையில் கேப்டன் விராட் கோலியும் சிறப்பாக விளையாடினார். ஃபின்ச் மற்றும் தேவ்தத் படிக்கலும் அணிக்கு சிறப்பான தொடக்கம் தந்து வருகின்றனர்.

ஒருவேளை இந்த நான்கு வீரர்களும் முன்கூட்டியே ஆட்டமிழக்கும் பட்சத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்த போவது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. பவர் பிளேவில் கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர் அணிக்கு பக்கபலமாக உள்ளனர். மிடில் ஓவருக்கு சஹல் மற்றும் சைனி, டெத் ஓவரில் பந்துவீச உடானா என பெங்களூரு அணியின் பந்துவீச்சு வரிசையும் சிறப்பாக உள்ளது..


பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. நான்கு போட்டிகளில் இந்த அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டுள்ளது. பஞ்சாப் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் இன்றைய போட்டியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிச்சயம் அந்த அணியின் பேட்டிங் வரிசைக்கு பக்கபலமாக அமையும்.

கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் இணை சிறபான பார்மில் உள்ளது. மிடில் ஆர்டர் தான் பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய பிரச்னை. அதை சரி செய்யாமல் சேசிங்கில் இவர்கள் வெல்வது கடினம்தான். ஷமி மற்றும் பிஷ்னாய் பந்துவீச்சில் அணிக்கு பக்கபலமாக உள்ளனர்.

இந்த தொடரின் முதல் சுற்றில் இரு அணிகளும் மோதிக் கொண்ட ஆட்டத்தில் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.இரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 13 ஆட்டங்களிலும் பெங்களூர் அணி 11 ஆட்டங்களிலும் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading