விளையாட்டு

  • associate partner

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றப் போவது யார்?

நடப்பாண்டு ஐ.பி.எல் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்ற கல்வி நிறுவனமான அன்அகடாமி(Unacademy), அமோசன், பைஜூ ஆகிய நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றப் போவது யார்?
கோப்பு படம்
  • Share this:
ஐ.பி.எல் தெடாரின் புதிய டைட்டில் ஸ்பான்சர்ஷிப் யார் என்று இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதனிடையே சீன உடனான எல்லை பிரச்னை காரணமாக ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சராக விவோ தொடர்வதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரிலிருந்து இந்தாண்டு விலகுவதாக சீன நிறுவனமான விவோ அறிவித்தது.


டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விவோ விலகியதை அடுத்து புதிய ஸ்பான்சர்ஷிப்பை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முனைப்பு காட்டியது. இதற்கான வழிமுறையும் பிசிசிஐ வகுத்ததது. அதன்படி விவோ டைட்டில் ஸ்பான்சரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையை விட குறைவாக ஒப்பந்தம் செய்வது, புதிய டைட்டில் ஸ்பான்சர் 4 மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும், ஸ்பான்சர் எடுக்கும் நிறுவனம் குறைந்தது 300 கோடி ரூபாய்க்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

நடப்பாண்டு ஐ.பி.எல் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்ற கல்வி நிறுவனமான அன்அகடாமி(Unacademy), அமோசன், பைஜூ ஆகிய நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதில் அன்அகடாமி டைட்டில் ஸ்பான்சரை பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அன்அகடாமி நிறுவனம் ஐ.பி.எல் தொடரில் ஏற்கனவே ஸ்பான்சராக உள்ளது. டைட்டில் ஸ்பான்சராக இந்தாண்டு 300 கோடி ரூபாய் ஒப்பந்தம் பிசிசிஐ திட்டமிள்ளதாக கூறப்படுகிறது.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading