விளையாட்டு

  • associate partner

ஐபிஎல் 2020 : அதிக ரன்களை பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் யார் யார்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்ச சராசரி மற்றும் அதிக ரன்களுடன் டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல் 2020 : அதிக ரன்களை பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் யார் யார்?
மாதிரிப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 9:33 PM IST
  • Share this:
டெக்கான் சார்ஜர்ஸ் கலைக்கப்பட்ட பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உருவானது. இந்த அணி சீரானதாகவும், வெற்றிகரமாகவும் இருந்தது. ஐபிஎல் போட்டிகளில் இந்த அணி ஒரு முறை பட்டத்தை வென்றுள்ளது. இந்த அணியை சார்ந்தவர்கள் எப்போதும் தங்கள் திறமையை அதிக ஆற்றலுடன் வெளிப்படுத்துவார்கள். ஐபிஎல்லில் அதிக ரன்கள் பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிறந்த 10 வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.

1.டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக உள்ளார். இவர் இதுவரை 71 போட்டிகளில் 55.44 என்ற சராசரியும், ஸ்ட்ரைக் ரேட் 146.87 உடன் 3,271 ரன்கள் எடுத்துள்ளார்.


2.ஷிகர் தவான்

ஷிகர் தவான் தற்போது டெல்லி கேபிட்டல் அணியில் விளையாட உள்ளார். முன்னதாக அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய போது 85 போட்டிகளில் 34.49 சராசரியாக 2518 ரன்கள் எடுத்துள்ளார்.

3.கேன் வில்லியம்சன்தற்போதைய நியூசிலாந்து கேப்டனான கேன் வில்லியம்சன், உலக கிரிக்கெட்டில் மிகவும் சீரான பேட்ஸ்மேன்களில் ஒருவராக உள்ளார். ஐ.பி.எல்லில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரரான இவர் இதுவரை 41 போட்டிகளில் சராசரி 38.29க்கு 1,302 ரன்கள் எடுத்துள்ளார்.

4.மொய்சஸ் ஹென்ரிக்ஸ்

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பல வெற்றிகளை கொடுத்துள்ளார். மேலும் கணிசமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இவர் 42 போட்டிகளில் 27.96 சராசரியாகவும், ஸ்ட்ரைக் வீதம் 128.83 ஆகவும் 755 ரன்கள் எடுத்துள்ளார்.

5.மனிஷ் பாண்டே

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிகவும் விலையுயர்ந்த வீரர்களில் ஒருவர் மனிஷ் பாண்ட. வலது கை ஆட்டக்காரரான இவர் கடந்த இரண்டு சீசன்களில் தனது முத்திரையை பதித்துள்ளார். பாண்டே 27 போட்டிகளில் 33.05 சராசரியாக 628 ரன்கள் எடுத்துள்ளார்.

6.நமன் ஓஜா

மத்திய பிரதேசத்தின் சீரான செயல்திறன் கொண்ட வீரரான நமன் ஓஜா, விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்படுகிறார். இவர் தனது 56 போட்டிகளில் 19.46 சராசரியுடன் 584 ரன்கள் எடுத்துள்ளார்.

7.யுவராஜ் சிங்

2007 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற காரணமாக இருந்த வீரர்களில் முக்கியமான நபராக யுவராஜ் சிங் பார்க்கப்பட்டார். இவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவில் ஹீரோவாக உள்ளார். யுவராஜ் சிங் தனது 22 போட்டிகளில் 488 ரன்கள் எடுத்தார்.

8.ஜானி பேர்ஸ்டோவ்

இங்கிலாந்து அணியின் முக்கிய வீரரான பேய்ர்ஸ்டோவ், வார்னருடன் தொடக்க ஆட்டத்தை கொண்டிருந்தார். இவர் 10 போட்டிகளில் 55.62 சராசரியுடன் 445 ரன்கள் எடுத்துள்ளார்.

9.தீபக் ஹூடா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் நட்சத்திரங்களில் ஒருவரான இவர் சிறந்த ஆல்ரவுண்டர். மேலும் இவர் 47 போட்டிகளில் 13.81 சராசரியிலும்,  117.66 ஸ்ட்ரைக் வீதத்துடன் 373 ரன்கள் எடுத்துள்ளார்.

10.விஜய் சங்கர்

தமிழ்நாட்டின் இளம் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர். இவர் 19 ஐ.பி.எல். போட்டிகளில் 24.64  புள்ளிகளை கொண்டிருந்தார். சராசரியாக 345 ரன்கள் மற்றும் 128.73 ஸ்ட்ரைக் வீதமும் பெற்றுள்ளார்.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading