• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ரெய்னாவின் கோபம் தனியுமா...? பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுகிறாரா ஸ்ரீனிவாசன்...?

ரெய்னாவின் கோபம் தனியுமா...? பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுகிறாரா ஸ்ரீனிவாசன்...?

ஸ்ரீநிவாசன், சுரேஷ் ரெய்னா, தோனி

ஸ்ரீநிவாசன், சுரேஷ் ரெய்னா, தோனி

IPL 2020 | சுரேஷ் ரெய்னாவின் இந்த முடிவு அணி நிர்வாகிகளை விட, ரசிகர்களுக்குத்தான் அதிர்ச்சியாக அமைந்துள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் நடப்பு ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடக்குமா? என்ற சந்தேகம் இன்று வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க சி.எஸ்.கே ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது சின்ன தல என அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவின் விலகல்.

தனிப்பட்ட காரணத்திற்காக ரெய்னா இந்தியா சென்றுவிட்டார் என்றும்,  பிறகு அவரது மாமாவின் மர்மமான மரணம் என்றும்  சி.எஸ்.கே அணி நிர்வாகத்தால் சொல்லப்பட்டது. ஆனால், உண்மை அதுவல்ல என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
துபாய் சென்றடைந்த சி.எஸ்.கே அணி வீரர்களுக்கு அங்கிருக்கும் பிரபல தாஜ் நட்சத்திர ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு அறை ஒதுக்கும் விசயத்தில் சி.எஸ்.கே நிர்வாகம் பாரபட்சம் காட்டப்பட்டது என்பது தான் ரெய்னாவின் கோபம். கேப்டன் தோனிக்கு சகல வசதியுடன் கூடிய அறையும், துணை கேப்டன் ரெய்னாவிற்கு இரண்டாம் கட்ட அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பாரபட்சம் தான் ரெய்னாவை போட்டியிலிருந்து விலகி இந்தியா வரவழைத்துள்ளது. சி.எஸ்.கே மேலாளர் ரஸலிடம் ரெய்னா முறையிட்டும் அவருக்கு பிடித்தாற்போல் அறை ஒதுக்க அணி நிர்வாகம் மறுத்துவிட்டது. மேலாளர் ரஸல், தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், கேப்டன் தோனி மூவரும் சமாதானப்படுத்தியும் ரெய்னா பிடிவாதமாகவே இருந்துவிட்டார் என கூறப்படுகிறது. இத்தனை பிரச்சனையையும் சி.எஸ்.கே உரிமையாளர் ஸ்ரீனிவாசனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெய்னா விவகாரத்தில் அனைத்தையும் கேட்டுவிட்டு உடனே எதிர்வினையாற்றிய ஸ்ரீனிவாசன்,  சிலர் வெற்றி மமதை தலைக்கேறி பந்தா காட்டுகிறார் எனவும், எந்த பிரச்சனையையும் கூலாக கையாளும் கேப்டன் எங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். அணி நிர்வாகவும் ரெய்னாவின் இடத்தை நிரப்ப இளம் பேட்ஸ்மேன் ரித்துராஜை தயார்படுத்த முனைப்புகாட்டியது.
ஸ்ரீனிவாசன் பேச்சு, அணி நடவடிக்கை ஒட்டுமொத்த ரசிகர்களையும் காயப்படுத்த சமூக வலைதளங்களில் ரெய்னாவிற்கு ஆதரவாக குரல் எழுந்தது.  அத்துடன் ஸ்ரீனிவாசனை விமர்சித்தும் குரல் எழுப்பப்பட்டது.



இதை புரிந்துகொண்ட ஸ்ரீனிவாசன் உடனே பல்டி அடித்து, தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என கூறியுள்ளார். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையையும் ஆட்டுகிறாரா? ஸ்ரீனிவாசன் என ரசிகர்கள் நினைக்கும் படி நடந்துகொண்டுள்ளார் என கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. தோனிக்கு பிறகு ரெய்னாதான் எல்லாம் என நினைத்திருந்த சி.எஸ்.கே அணி ரசிகர்களின் எண்ணம் பொய்த்துப்போய்விட்டது என புலம்பவும் தொடங்கிவிட்டனர்.

அத்துடன் தனது கோபத்தால் 11 கோடி ரூபாய் சம்பளம், மஞ்சள் ஜெர்ஸி, புகழ் என எல்லாத்தையும் இழந்துவிட்டார் ரெய்னா எனவும் ஒரு சிலர் கொக்கரிக்கின்றனர். ஸ்ரீனிவாசனின் மனமாற்றம் ரெய்னாவின் கோபத்தை தனிக்குமா? நடப்பு ஐ.பி.எல். போட்டியை சுவாரஸ்யம் ஆக்குவாரா? சி.எஸ்.கே அணி உருவான காலத்திலிருந்து தொடர்ந்து பயணித்து வரும் ரெய்னா எடுக்கும் அடுத்தகட்ட முடிவில் தான் அமைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: