விளையாட்டு

  • associate partner

பேர்ஸ்டோ, வார்னர், வில்லியம்ஸன் சிறப்பான ஆட்டம்: 162 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பேர்ஸ்டோ, வார்னர், வில்லியம்ஸன் சிறப்பான ஆட்டம்: 162 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஜானி பேர்ஸ்டோ
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 9:36 PM IST
  • Share this:
டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு162 ரன்களைக் குவித்துள்ளது.

ஐ.பி.எல்லின் 11-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே நிதானமாக ஆடினர். வார்னர் 33 ரன்கள் எடுத்திருந்தநிலையில், அமித் மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு களமிறங்கிய மனிஷ் பாண்டே 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். பேர்ஸ்டோ 53 ரன்களில் ஆட்டமிழந்தநிலையில், வில்லியம்சன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.


SCHEDULE TIME TABLE:
ORANGE CAP:

ஆட்டநேர இறுதியில் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களைக் குவித்தது.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading