விளையாட்டு

  • associate partner

ஐபிஎல் 2020 : இன்று மோதும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வீரர்கள் யார் யார்?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2020 சீசனின் மூன்றாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் போட்டியிடவுள்ளது.

ஐபிஎல் 2020 : இன்று மோதும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வீரர்கள் யார் யார்?
விராட் கோலி, வார்னர்
  • News18 Tamil
  • Last Updated: September 21, 2020, 7:32 PM IST
  • Share this:
இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை இரு தரப்பினரும் வெளிப்படுத்துவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியன் பிரீமியர் லீக்கின் கடைசி நான்கு சீசன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுகளை எட்டியிருந்தாலும், 2016ம் ஆண்டிற்கு பிறகு இன்னும் கோப்பையை கைப்பற்றவில்லை. இருப்பினும், வலுவான அணியான எஸ்.ஆர்.எச் அணி வழக்கமான முன்னெடுப்புகளை தாண்டி போட்டிகளில் சிறப்பாக செயல்படக்கூடும்.

மறுபுறம், விராட் கோலியின் தலைமையிலான பெங்களூரு அணி இன்னும் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றுவில்லை. அது மட்டுமின்றி சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் அனுபவமிக்க பந்து வீச்சாளர்கள் இருந்தபோதிலும், அவர்களின் திறமை வெளிப்படாமல் உள்ளது. ஆனால் இத்தனை ஆண்டு காத்திருப்பு இந்த ஆண்டு பலனளிக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.

பல மாத காத்திருப்பிற்கு பிறகு இந்த ஆண்டு ஐ.பி.எல்லின் மாபெரும் தொடக்கமாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது, அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து, இன்று மூன்றாவதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினர் போட்டியிட உள்ளனர்.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான போட்டி எங்கு நடைபெறும்?

இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான போட்டி தொடங்கும் நேரம்?இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் (ஐ.எஸ்.டி) படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான போட்டியை எந்த தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பும்?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 இன் அனைத்து போட்டிகளையும், இந்தியாவில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி / எஸ்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி எச்டி / எஸ்டி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழிலும் பார்க்கலாம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டியின் நேரடி ஒளிபரப்பை எப்படி பார்ப்பது?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2020 இன் அனைத்து போட்டிகளும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
POINTS TABLE:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் 11 வீரர்கள்: விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), பிரியாம் கார்க், மனிஷ் பாண்டே, அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், முகமது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல் மற்றும் கலீல் அகமது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 11 வீரர்கள்: ஆரோன் பிஞ்ச், தேவதட் பாடிக்கல், விராட் கோஹ்லி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), சிவம் டியூப், மொயீன் அலி, வாஷிங்டன் சுந்தர், டேல் ஸ்டெய்ன், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி மற்றும் யுஸ்வேந்திர சாஹல்.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading