விளையாட்டு

  • associate partner

ஐ.பி.எல் 2020 : ஹைதராபாத் - பெங்களூரு பலப்பரீட்சை... பலம், பலவீனம் என்ன?

IPL 2020 | நடப்பு தொடரில் இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன.

ஐ.பி.எல் 2020 : ஹைதராபாத் - பெங்களூரு பலப்பரீட்சை... பலம், பலவீனம் என்ன?
விராட் கோலி, வார்னர்
  • News18
  • Last Updated: November 6, 2020, 6:34 PM IST
  • Share this:
2020 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்றைய தினம் எலிமினேட்டர் சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது. இதில் புள்ளிப் பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ள ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அபுதாபி மைதானத்தில் இரவு ஏழு முப்பது மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

நடப்புத் தொடரின் இரண்டாவது பாதியில் விஸ்வரூபம் எடுத்த அணிகள் ஒன்று ஹைதராபாத். லீக் சுற்றில் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் புள்ளி பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருந்த அணியை ஐதராபாத் வீழ்த்தி உள்ளது. குறிப்பாக கடைசி லீக் போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு என்ற நிலை இருந்த சூழலில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தினர்.

அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அசத்தலான பார்மில் உள்ளார். கடந்த 6 சீசன்களிலும் தலா 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இவருடன் களமிறங்கும் சாஹா டெஸ்ட் வீரர் என்ற தன்மீதான முத்திரையை கிழித்துள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் அணியின் ஸ்கோருக்கு இவர் வழங்கும் பங்களிப்பு அளப்பரியது. வில்லியம்சன், மணீஷ் பாண்டேவும் கை கொடுத்தால் மிகப்பெரிய ஸ்கோரை இந்த அணி அசால்ட்டாக பதிவு செய்ய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. பந்துவீச்சில் பவர்பிளே ஹூரோவாக சந்தீப் சர்மா உள்ளார்.மிடில் ஓவரில் ரஷித் கான், நடராஜன் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது வலுவான அணியாகவே ஐதராபாத் உள்ளது.


பெங்களூரு அணியை பொறுத்தவரை கடந்த சில போட்டிகளாகவே வெற்றியை பதிவு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். ஹாட்ரிக் தோல்வியுடன் எலிமினேட்டர் சுற்றில் அந்த அணி களம் காண்கிறது. கோலி, டிவில்லியர்ஸ் என தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது அணியின் ஸ்கோர் தேவ்தத் படிக்கலை மட்டுமே நம்பியுள்ளது. இதனால் பவர்பிளேவில் இவரது விக்கெட்டை எடுக்கவே ஐதராபாத் வீரர்கள் அதிக முனைப்பு காட்டுவார்கள். கேப்டன் கோலி கடந்த சில போட்டிகளாகவே பொறுப்பற்ற ஷாட்டுகளை அடித்து அவுட்டாகி வருகிறார். டிவில்லியர்ஸ் அதிக நேரம் களத்தில் இருந்தாலும் அது ரன்களாக போர்டில் எதிரொலிப்பதில்லை. இந்த பிரச்னைகளுக்கு தீர்வுகண்டால் மட்டுமே பெங்களூரு அணியால் பெரிய ஸ்கோரை பதிவு செய்யவோ, அல்லது இலக்கை சிறப்பாக விரட்டவோ முடியும். பந்துவீச்சை பொறுத்தவரை அந்த அணி வலுவாகவே உள்ளது. காயம் காரணமாக முந்தைய போட்டியில் விளையாடாத சைனி இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு தொடரில் இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஹைதராபாத் அணி 9 போட்டிகளிலும் பெங்களூர் அணி 7 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: November 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading