விளையாட்டு

  • associate partner

SRHvsKKR | ஐ.பி.எல் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஸ்டைலிஸ் அம்பயர்... யார் இவர்?

IPL 2020 | பந்துவீச்சாளர் பவுலிங் செய்யும் போது இவர் நின்ற தோரணை, செயல்பாடுகள் என அனைத்து வேற லெவலில் இருந்தது.

SRHvsKKR | ஐ.பி.எல் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஸ்டைலிஸ் அம்பயர்... யார் இவர்?
  • Share this:
ஐ.பி.எல் போட்டிகளில் அதிரடியான பேட்டிங், மிரட்டலான பவுலிங் மூலம் வீரர்கள் ரசிகர்களின் கவனத்தை பெறுவார்கள். ஆனால் நீளமான முடி, வித்தியாசமான பாவனைகளால் அம்பயர் ஒருவர் அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் 35-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் அம்பயராக செயல்பட்ட பாஷிம் பதக் நீளமான முடி, வித்தியாசமான பாவனைகளால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பந்துவீச்சாளர் பவுலிங் செய்யும் போது இவர் நின்ற தோரணை, செயல்பாடுகள் என அனைத்து வேற லெவலில் இருந்தது.
மும்பையை சேர்ந்த பாஷிம் பதக் உள்ளூர் போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார். அப்போதே போட்டியின் போது ஹெல்மெட் அணிந்து அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தவர். போட்டிகளின் போது அம்பயர்களுக்கு காயம் ஏற்பாடமல் தடுப்பதற்காவே அவர் ஹெல்மெட் அணிந்து செயல்பட்டதாக தெரிவித்தார்.

உள்ளூர் போட்டிகளில் நடுவராக செயல்பட்ட அவருக்கு ஐ.பி.எல் 2020 தொடரில் நடுவராக செயல்பட வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது ஐ.பி.எல் தொடரின் மிகவும் ஸ்டைலிஷ் அம்பயராக உருவெடுத்துள்ளார்.இதனிடையே பரபரப்பாக நடைபெற்ற கொல்கத்தா - சன்ரைசர்ஸ் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் அணி முதலில் களமிறங்கியது. கொல்கத்தா அணி சார்பில் ஃபெர்குசன் சூப்பர் ஓவரை வீசினார். இந்த போட்டியில் ஃபெர்குசன் 4 ஓவர் வீசி 15 ரன்களள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதனால் சூப்பர் ஃபெர்குசனிடம் கொடுக்கப்பட்டது.  அற்புதமாக பந்துவீசிய ஃபெர்குசன் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து வார்னர் மற்றும் சமத் ஆகிய 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனால் சன்ரைசர்ஸ் அணி சூப்பர் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.  சூப்பர் ஓவரில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என இருந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி சார்பில் ரஷித் கான் சூப்பர் ஓவரை வீசினார்.  கொல்கத்தா 4 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களை சேர்த்து எளிதில் வெற்றி பெற்றது.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்.
First published: October 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading