ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

9 சிக்சர்கள்: 19 பந்துகளில் 50 ரன்கள்- சூறாவளி ஆட்டத்தில் மைதானத்தை கலங்கடித்த சஞ்சு சாம்சன்

9 சிக்சர்கள்: 19 பந்துகளில் 50 ரன்கள்- சூறாவளி ஆட்டத்தில் மைதானத்தை கலங்கடித்த சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 32 பந்துகளில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கியது. முதல்போட்டியில் மும்பை அணியை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்தநிலையில், ஸ்மித்துடன் சஞ்சு சாம்சம் ஜோடி சேர்ந்தார்.

  MOST SIXES:

  தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தார். அதிரடியாக விளையாடிய சஞ்சு 19 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களில் குறைந்த பந்துகளில் 50 ரன்கள் அடித்ததில் இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

  RESULT DATA:

  முதல் இடத்தில் ஜோஸ் பட்லர் உள்ளார். அவர் 18 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 9 சிக்சர் 1 பவுண்டரிவுடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 13 ஓவரில் 140 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. ஸ்மித் 58 ரன்களுடனும், உத்தப்பா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

  Published by:Karthick S
  First published:

  Tags: CSK, IPL 2020, Sanju Samson