ஐபிஎல் 2020ன் முதல் போட்டிக்காக இந்தியாவின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் இருந்து மைதானத்திற்கு நடந்து செல்வதைத் காண மில்லியன் கணக்கான ரசிகர்கள் காத்திருந்த தருணம் அது. அவரது அணியான சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக, இந்தியன் பிரீமியர் லீகின் தற்போதைய சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இருந்தது. மஞ்சள் ஆடை மற்றும் மாசான தாடியுடன், எம்.எஸ் தோனி தோற்றமளித்தார். கொரோனா ஊடங்கின் போது அவர் தனது நேரத்தை சரியாக பயன்படுத்தி கொண்டார். ஏனெனில் அவர் எப்போதும் இருந்ததை விட இன்னும் வலிமையாக இருக்கிறார். உண்மையில், எந்த அணி முதலில் விளையாட வேண்டுமென்று டாஸ் போட அவர் வந்தபோது, முரளி கார்த்திக் தோனியை பார்த்து ஆச்சரியப்பட்டார்.
ஆனால் கார்த்திக் மற்றும் டி.வியில் பார்க்கும் ரசிகர்கள் மட்டுமல்லாமல், தோனியின் தோற்றமானது அவரது மனைவி சாக்க்ஷியிடமிருந்தும் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் தோனி இதுவரை இல்லாத ஒரு புதிய ஸ்டைலில் தாடி வைத்திருந்தார். இதுகுறித்து சாக்க்ஷி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தனது கணவரின் புகைப்படத்தை பதிவிட்டு, “எவ்வளவு அழகானவர்!” என்று எழுதியுள்ளார்.
SCHEDULE TIME TABLE:
மூத்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான எம்.எஸ்.தோனி 14 மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் விளையாட்டுக்கு திரும்பியுள்ளார். அவர் நியூசிலாந்திற்கு எதிராக ஐ.சி.சி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 2019ம் ஆண்டில் விளையாடியது தான் கடைசியாக அவர் களமிறங்கியது. தற்போது தோனியை மீண்டும் விளையாட்டில் பார்ப்பது, ஓய்வு பெற்ற பின்னர் வருத்தமடைந்த அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களின் முகத்தில் நிச்சயமாக ஒரு புன்னகையை ஏற்படுத்தியுள்ளது.
PURPLE CAP:
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற தோனி பில்டிங்கை ஜூஸ் செய்ததையடுத்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 163 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. பின்பு சிஎஸ்கே 19.2 ஓவர்களில் அம்பதி ராயுடு 71 ரன்களும், ஃபஃப் டு பிளெசிஸின் 55 ரன்களும் எடுத்ததால், சி.எஸ்.கே அணியை ஐந்து விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் எளிதில் வெற்றி பெற்றது.
IPL 2020 RESULTS:
இது சிஎஸ்கே அணி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. எனினும் கேப்டன் தோனி விளையாடாத வருத்தம் ரசிகர்களுக்கு இருந்தது.கடந்த போட்டியில் தோனிக்கு பேட்டிங் விளையாட அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், ஸ்டம்புகளுக்குப் பின்னால் அவரது அசாதாரண திறன்களை காண முடிந்தது.
மேலும் அவர் இரண்டு முக்கிய வீரர்களான கீரோன் பொல்லார்ட் மற்றும் கிருனல் பாண்ட்யா ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்தார். இன்று ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிராக சி.எஸ்.கே அணியுடனான போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. தோனியின் ஓரிரு ஹெலிகாப்டர் ஷாட்களை கண்டால் போதும் என்று ரசிகர்கள் காத்திருப்பதால் இன்று எம்.எஸ். தோனி பேட்டிங் மூலம் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.