விளையாட்டு

  • associate partner

பேட்டிங்கில் கலக்கிய ஏபி டி வில்லியர்ஸ்: பவுலிங்கில் மிரட்டிய சாஹல்- வெற்றிக் கணக்குடன் துவங்கிய பெங்களூரு அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் கலக்கிய ஏபி டி வில்லியர்ஸ்: பவுலிங்கில் மிரட்டிய சாஹல்- வெற்றிக் கணக்குடன் துவங்கிய பெங்களூரு அணி
பெங்களூரு அணி வீரர்கள்
  • News18 Tamil
  • Last Updated: September 21, 2020, 11:37 PM IST
  • Share this:
ஐ.பி.எல் 13-வது சீசனின் மூன்றாவது போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை இரு தரப்பினரும் வெளிப்படுத்துவார்கள் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்து ஹைதராபாத் அணி சார்பில் கேப்டன் வார்னரும், பேர்ஸ்டோவ்வும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வார்னர் 6 ரன்னில் ஆட்டமிழந்தநிலையில், பேர்ஸ்டோவ்வும், மனிஷ் பாண்டேவும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர்.
MOST SIXES:


மனிஷ் பாண்டே 33 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் பேர்ஸ்டோவ் நிதானமாக ஆடினார். அவரும் 61 ரன்கள் எடுத்திருந்தநிலையில், ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர்.

PURPLE CAP:
19.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்து ஹைதராபாத் அணி தோல்வியைத் தழுவியது. பெங்களூரு அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சாஹல், 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading