மும்பை - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை..

மும்பை - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை..

மும்பை - பெங்களூரு அணி வீரர்கள் வீராட் கோலி-ரோஹித் ஷர்மா

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மோத உள்ள அணிகள் அவற்றின் பலம் பலவீனம் இதுவரை மோதிய போட்டிகள் ஆகியவற்றை பார்க்கலாம்.

 • Share this:
  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பெங்களூரு - மும்பை அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் நடப்பு தொடரில் தலா 2 போட்டிகளில் விளையாடி தலா ஒன்றில் வென்றுள்ளன. பெங்களூரு அணி தனது முந்தைய போட்டியில் பஞ்சாப் அணியிடம் மோசமாக தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் தொடக்க வீரர் பின்ச் சரியான பார்ம் இல்லாமல் தடுமாறி வருகிறார். இதேபோல் கேப்டன் விராட் கோலியும் முந்தைய போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிராக ஃபீல்டிங்கிலும் இவர் சொதப்பியது அதிர்ச்சியாக அமைந்தது.

  டிவில்லியர்ஸ் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது. பந்துவீச்சை பொறுத்தவரை சஹல், சைனி, துபே நம்பிக்கை அளிக்கின்றனர். வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், ஸ்டெய்ன் ஆகியோர் விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருவது பெங்களூரு அணிக்கு பலவீனமாக உள்ளது.

  மும்பை அணி தனது முதல் போட்டியில் சென்னைக்கு எதிராக தோல்வியைத் தழுவிய போதும், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக சிறப்பான கம்பேக் கொடுத்தனர். கடந்த சில சீசனாக பெரிய ஸ்கோரை பதிவு செய்யாத மும்பை கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். சூர்ய குமார் யாதவ், சவுரவ் திவாரி ஆகியோரும் பேட்டிங்கில் அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் உள்ளனர்.

  டி காக், பாண்டியா சகோதரர்களும் சிறப்பாக செயல்பட்டால் மும்பை அணியின் ரன்வேட்டையை கட்டுப்படுத்துவது எதிரணிக்கு கஷ்டம்தான். பந்துவீச்சில் மும்பை அணி வீரர்கள் அனைவருமே சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இதனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலுமே வலுவான அணியாகவே மும்பை உள்ளது.

  மேலும் படிக்க... ஸ்மித், சஞ்சு சாம்சன், டிவாட்டியா அதிரடி - 224 ரன்களைச் சேஸ் செய்து வென்ற ராஜஸ்தான்  இரு அணிகளும் ஐபிஎல்லில் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் மும்பை அணி 18 போட்டிகளிலும் பெங்களூரு அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
  Published by:Vaijayanthi S
  First published: