விளையாட்டு

  • associate partner
Home » News » Sports » IPL IPL 2020 ROHIT SHARMA HITS A HUGE SIX IN PRACTICE AS BALL HITS A MOVING BUS VJR

மைதானத்தையும் தாண்டி ஓடும் பேருந்து மீது விழுந்த பந்து... வைரலாகும் ரோஹித் சர்மாவின் சிக்ஸர் வீடியோ

IPL 2020 | பயிற்சியின் போது ரோஹித் சர்மா அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தையும் தாண்டி சாலையில் ஓடிக் கொண்டிருந்த பேருந்து மீது விழுந்தது.

மைதானத்தையும் தாண்டி ஓடும் பேருந்து மீது விழுந்த பந்து... வைரலாகும் ரோஹித் சர்மாவின் சிக்ஸர் வீடியோ
  • News18 Tamil
  • Last Updated: September 9, 2020, 10:18 PM IST
  • Share this:
ரோஹித் சர்மா பயிற்சியின் போது அடித்த சிக்ஸர் மைதானத்தை தாண்டி ஓடும் பேருந்தின் மீது விழும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் 2020 தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு அபுதாபயில் தொடங்க உள்ளது.

ஐ.பி.எல் தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். மும்பை அணியின் கேப்டனும்  ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரோஹித் சர்மா அபுதாபியில் பேட்டிங் பயிற்சி எடுத்து வருகிறார்.


பயிற்சியின் போது ரோஹித் சர்மா அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தையும் தாண்டி சாலையில் ஓடிக் கொண்டிருந்த பேருந்து மீது விழுந்தது. ரேஹித் சர்மா அடித்த சிக்ஸர் 95 மீட்டர் தூரம் உடையது.இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஹிட்மேனின் அதிரடியை பார்க்க ஆவலாக உள்ளதாக ரசிகர்கள் பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல் தொடரின் நடப்பு சாம்பியனாக உள்ளது. ஐ.பி.எல் தொடரில் அதிக முறை(4) கோப்பையை வென்ற அணியாக மும்பை உள்ளது. இந்த முறையும் கோப்பையை வெல்ல மும்பை அணி தீவிரமாக பயிற்சியில் இறங்கி உள்ளது.
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading