விளையாட்டு

  • associate partner

RCBvsRR | வெளுத்து வாங்கி டி-வில்லியர்ஸ்... பெங்களூரு அணி அபார வெற்றி

IPL 2020 | பெங்களூரு அணியின் வெற்றி கேள்விக்குறி ஆன நிலையில் அதிரடி டி-வில்லியர்ஸ் அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்டார்.

RCBvsRR | வெளுத்து வாங்கி டி-வில்லியர்ஸ்... பெங்களூரு அணி அபார வெற்றி
டி-வில்லியர்ஸ்
  • Share this:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டி-வில்லியர்ஸின் அதிரடியான ஆட்டத்தால் பெங்களூரு அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரின் 33-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தானி அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராபின் உத்தப்பா களமிறங்கினர். ராஜஸ்தான் அணியில் நடுவரிசையில் இறங்கி வந்த உத்தப்பா இன்று முதன்முறையாக ஓபனிங் ஆடினார்.


அதற்கேற்றவாறு ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து சாஹல் பந்துவீச்சில் அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 9 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 24 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.

ராஜஸ்தான் அணியின் மற்ற வீரர்கள் சொதப்பினாலும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். 36 பந்துகளை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித் 1 சிக்சர், 6 பவுண்டரிகள் விளாசி 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக படிகல், பின்ச் களமிறங்கினர். பின்ச் 14 ரன்னில் ஷ்ரோயஸ் கோபல் பந்துவீச்சில் அவுட்டாக அடுத்து வந்த கோலி, படிகல் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி நிதனமாக ஆடி வந்த நிலையில் படிகல் 35 ரன்னிலும், கோலி 43 ரன்னிலும் அவுட்டாகினர்.பெங்களூரு அணியின் வெற்றி கேள்விக்குறி ஆன நிலையில் அதிரடி டி-வில்லியர்ஸ் அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்டார். இறுதி ஓவர்களில் தனியாளாக அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 55 ரன்கள் விளாசி பெங்களூரு அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading