விளையாட்டு

  • associate partner

மும்பை-பெங்களூரு போட்டி: சிறப்பாக ஆடிய வீரர்கள் யார் யார்?

மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையில் சுவாரஸ்யமாக நடைபெற்றப் போட்டியின் ஸ்டார் பெர்பாமர்கள் யார் என பார்க்கலாம்.

மும்பை-பெங்களூரு போட்டி: சிறப்பாக ஆடிய வீரர்கள் யார் யார்?
மாதிரிப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 2:38 PM IST
  • Share this:
ஐபிஎல் 2020 மோதலில் திங்கள்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே நடந்த சுவாரஸ்யமான போட்டியில் சூப்பர் ஓவரில் ஆர்சிபி அணி அதிரடியாக வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.  இதனைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் தேவதத் பாடிக்கல் அரைசதம் அடித்தனர். படிக்கல் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார், பிஞ்ச் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் இறங்கிய கோலி 11 பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

அடுத்தடுத்து இறங்கிய வீரர்கள் சொற்ப ரங்களில் வெளியேற, ஏபி டிவில்லியர்ஸ்,  ஆல்ரவுண்டர் சிவம் துபே இணைந்து அதிரடியாக ஆடினர். ஏபி டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 55  ரன்ககளும்,  சிவம் துபே  10 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 202 என்ற இலக்கை நிர்ணயித்தது.

இதன் பின்னர் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தனர். கேப்டன ரோஹித் சர்மாவை 8 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். குயின்டன் டி காக் தனது விக்கெட்டை 14 ரன்களில் கொடுத்த நிலையில், சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார்.  அதன் பின்னர் இஷான் கிஷன்,  மும்பை இந்தியன்ஸிற்காக  மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 58 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார்.


அவருடன் ஜோடி சேர்ந்த கீரோன் பொல்லார்ட் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 24 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் எடுத்தது. இரு அணிகளும் 201 ரன்கள் எடுத்து சமமானதால் சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியினர் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பின்னர் இறங்கிய ஆர்சிபி அணியினர் 11 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிக ரன் எடுத்தவர் :

ஏபி டிவில்லியர்ஸ் ஆர்.சி.பி.க்கு அதிக ரன்கள் எடுத்துள்ளார். இவர் 24 பந்துகளில் 55 ரங்களுடன், 229.17 ஸ்ட்ரைக் வீதத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். தனது இன்னிங்ஸில் அவர் நான்கு பவுண்டரிகளையும், நான்கு சிக்ஸர்களையும் அடித்தார்.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிக விக்கெட் எடுத்தவர் :

இசுரு உதனா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இவர் நான்கு ஓவர்களில் 45 ரன்கள் எடுத்து 11.25 என்ற எகனாமி விகிதத்தில் உள்ளார்.
RESULT DATA:

மும்பை இந்தியன்ஸுக்கு அதிக ரன் எடுத்தவர் :

இஷான் கிஷன் 58 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து 170.69 ஸ்ட்ரைக் வீதத்தில் உள்ளார். அவர் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒன்பது சிக்சர்களை அடித்து தூள் கிளப்பியுள்ளார்.
ORANGE CAP:

மும்பை இந்தியன்ஸுக்கு அதிக விக்கெட் எடுத்தவர் :

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக விக்கெட் வீழ்த்தியவர் ட்ரெண்ட் போல்ட். அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார், நான்கு ஓவர்களில் 34 ரன்களை எடுத்து 8.5 என்ற எகனாமி விகிதத்தில் உள்ளார்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading