விளையாட்டு

  • associate partner

RCB vs KXIP | பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு

கேப்டன் விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று ஆடி 39 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஷமி பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

RCB vs KXIP | பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல் 2020
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடரின் இன்றையப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 171 ரன்கள் குவித்துள்ளது.

ஐ.பி.எல் 2020 தொடரின் 31-வது லீக் போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு மோதின. ஷார்ஜா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பின்ச் மற்றும் படிக்கல் களமிறங்கினர். படிக்கல் 18 ரன்னிலும், பின்சி 20 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். இந்த தொடரில் பொறுப்புடன் விளையாடி வரும் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி இன்றையப் போட்டியிலும் சிறப்பாக விளையாடினார்.


பெங்களூரு அணியில் வழக்கமாக 4-வது வீரராக களமிறங்கும் டி-வில்லியர்ஸ்க்கு பதிலாக மாற்று வீரர்க்கு வாய்ப்பளித்தார். வாஷிங்டன் சுந்தர் இன்றையப் போட்டியில் 4-வது வீரராக களமிறங்கினார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 13 ரன்னுகளும் அடுத்து வந்த ஷிவம் துபே 23 ரன்னிலும் அவுட்டாகினர்.

கடைசி ஓவர்களில் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டி-வில்லியர்ஸ் 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். கேப்டன் விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று ஆடி 39 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஷமி பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.













ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading