விளையாட்டு

 • associate partner

ஐபிஎல் 2020: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் பட்டியல்

இந்தியன் பிரீமியர் லீக்ஸின் முந்தைய சீசன்களில் ஆர்.சி.பி எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏமாற்றங்களையே கண்டிருந்தாலும், இந்த ஆண்டு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வலுவான விருப்பத்துடன் மீண்டும் செயல்படும் என்று நம்பப்படுகிறது. விராட் கோலி வழக்கம் போல அணியை வழி நடத்துவார். மேலும் இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளர் சைமன் பயிற்சி அளித்து வருகிறார் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2020: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் பட்டியல்
ஐபிஎல் 2020 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி
 • News18 Tamil
 • Last Updated: September 17, 2020, 7:36 PM IST
 • Share this:
ஆர்.சி.பி அணி கர்நாடகாவின் பெங்களூரை தளமாக கொண்ட ஆனந்த் கிருபால் என்ற உரிமையாளரின் கிரிக்கெட் அணியாகும். இது 2008ம் ஆண்டில் யுனைடெட் ஸ்பிரிட்ஸால் நிறுவனத்தின் மதுபான பிராண்டான 'ராயல் சேலஞ்ச்' என்று பெயரிடப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சொந்த மைதானமானது, பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியம் ஆகும். இந்த அணி ஐ.பி.எல் பட்டத்தை பெற தவறிய நிலையிலும் 2009 மற்றும் 2016க்கு இடையில், மூன்று முறை இரண்டாம் இடத்தை பிடித்தது. மேலும் ஆச்சரியப்படும் விதமாக, ஐ.பி.எல்லில் மிக உயர்ந்த 265/5 என்ற ரன்கள் மற்றும் மிகக் குறைவாக மொத்தம் 49 ரன்கள் என்ற இவ்விரண்டு சாதனைகளையும் ஆர்.சி.பி அணியே பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, 2008ம் ஆண்டில் அணியின் ஐகான் பிளேயர் "ராகுல் டிராவிட்" தானே தவிர வேறு யாருமில்லை. அந்த அணியில் அனில் கும்ப்ளேவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியன் பிரீமியர் லீக் இந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. ஐபிஎல் 2020 போட்டிகள் மார்ச் மாதத்தில் இந்தியாவில் விளையாட திட்டமிடப்பட்டது. இருப்பினும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக போட்டிகள் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டது. செப்டம்பர் 19 முதல் தொடங்க உள்ள இந்தஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நவம்பர் 10ம் தேதியன்று முடிவடைகிறது.


இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முதல் போட்டியானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக நடைபெற உள்ளது. மேலும் இந்த போட்டியானது துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 21ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும். அதுமட்டுமின்றி, ஐ.பி.எல் 2020 பட்டத்தை வெல்வதற்கு ஆர்.சி.பி. அணி தங்களால் முடிந்தவரை முயற்சிக்கும் என்பதால் அணியின் ஆதரவாளர்களை மகிழ்விக்கும் அணியாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் குறித்த முழு விவரத்தை இங்கு காண்போம்.

பேட்ஸ்மேன்
 • தேவதூத் பாடிக்கல்

 • விராட் கோஹ்லி (கேப்டன்)


பந்து வீச்சாளர்கள்

 • நவ்தீப் சைனி

 • உமேஷ் யாதவ்

 • முகமது சிராஜ்

 • யுஸ்வேந்திர சாஹல்


ஆல்ரவுண்டர்கள்

 • பவன் நேகி

 • குர்கீரத் சிங்

 • பவன் தேஷ்பாண்டே

 • வாஷிங்டன் சுந்தர்

 • சிவம் துபே

 • ஷாபாஸ் அகமது


விக்கெட் கீப்பர்

 • பார்த்திவ் படேல்

 • வெளிநாட்டு வீரர்கள்

 • ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்)

 • மொயீன் அலி (ஆல்ரவுண்டர்)

 • ஆரோன் பிஞ்ச் (பேட்ஸ்மேன்)

 • கிறிஸ் மோரிஸ் (ஆல்ரவுண்டர்)

 • ஜோசுவா பிலிப் (விக்கெட் கீப்பர்)

 • டேல் ஸ்டெய்ன் (பவுலர்)

 • இசுரு உதனா (பவுலர்)

 • ஆடம் ஜாம்பா (பவுலர்)

First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading