விளையாட்டு

  • associate partner

CSKvsRCB | முற்றிலும் மாறுப்பட்ட அணியுடன் களமிறங்கிய சி.எஸ்.கே... தோனி வைத்த ட்விஸ்ட்

IPL 2020 | துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

CSKvsRCB | முற்றிலும் மாறுப்பட்ட அணியுடன் களமிறங்கிய சி.எஸ்.கே... தோனி வைத்த ட்விஸ்ட்
CSKvRCB
  • Share this:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் 2020 தொடரின் 44-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

டாஸூக்கு பின் பேசிய மகேந்திர சிங் தோனி, நாங்களும் டாஸ் வென்றிருந்தால் பேட்டிங்கை தான் செய்திருப்போம். விக்கெட்களை தக்க வைத்து கொள்ள இது சிறந்த முடிவாக இருக்கும். கணித ரீதியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தற்போதும் வாய்ப்பு உள்ளது, ஆனால் இந்த சீசனில் நாம் எப்படி விளையாடினோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். 4 முதல் 5 போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. புள்ளிப்பட்டியலை பற்றி கவலைப்பட வேண்டாம். நாம் வெற்றி பெற்றால் அதிலிருந்து மேல் வருவோம். இதுவரை வாய்ப்பு அளிக்காதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளோம். அதன்படி சாண்ட்னர், மோனு அணியில் அணியில் இடம்பிடித்துள்ளனர்“ என்றார்.


சி.எஸ்.கே அணி : ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, ஜெகதீசன், எம்.எஸ்.தோனி , சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், மோனு குமார்

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading