முகப்பு /செய்தி /விளையாட்டு / ராஜஸ்தானைப் போராடிக் காப்பாற்றிய டிவாட்டியா, பராக் - 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ராஜஸ்தானைப் போராடிக் காப்பாற்றிய டிவாட்டியா, பராக் - 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ராஜஸ்தான் வீரர்கள்

ராஜஸ்தான் வீரர்கள்

ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • Last Updated :

ஐ.பி.எல் தொடரின் 26-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களிலும், பட்லர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அவரைத் தொடர்ந்து, ஸ்டீவன் ஸ்மித் 5 ரன்களில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சஞ்சு சாம்சன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரியான் பராக் மற்றும் ராகுல் டிவாட்டியா ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

SCHEDULE TIME TABLE:

ORANGE CAP:

பராக் 26 பந்துகளில் 42 ரன்களும், ராகுல் டிவாட்டியா 28 பந்துகளில் 45 ரன்களும் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

top videos
    First published:

    Tags: IPL 2020