விளையாட்டு

  • associate partner

பந்து வீச்சில் அசத்திய கொல்கத்தா: தனிஆளாக போராடிய டாம் குரான் - முதல்தோல்வியைத் தழுவிய ராஜஸ்தான்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்து வீச்சில் அசத்திய கொல்கத்தா: தனிஆளாக போராடிய டாம் குரான் - முதல்தோல்வியைத் தழுவிய ராஜஸ்தான்
கொல்கத்தா வீரர்கள்
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 11:31 PM IST
  • Share this:
ஐ.பி.எல் தொடரின் 12-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. அதனையடுத்து, களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பாவும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ச்சியாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தநிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தடுமாறியது. கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ராகுல் டிவாட்டியா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். டாம் குரான் மட்டும் ஒற்றை நபராக அதிரடியாக ஆடினார்.

ORANGE CAP:


PURPLE CAP:
அதிரடியாக ஆடிய டாம் குரான் 36 பந்துகளில் 54 ரன்களைக் குவித்தார். ஆட்டநேர இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியடைந்தது.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading