HOME»NEWS»SPORTS»ipl ipl 2020 purple cap holder kagiso rabada topples bumrah in top wicket taking charts ghta vjr

ஐபிஎல் 2020 : அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் 2-வது இடத்திற்கு சென்ற பும்ரா... அப்போ முதலிடம்?

IPL 2020 : மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா 13 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

ஐபிஎல் 2020 : அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் 2-வது இடத்திற்கு சென்ற பும்ரா... அப்போ முதலிடம்?
பும்ரா
  • Share this:

ஐபிஎல் 2020 லீக் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில், ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்கு தள்ளி தற்போது ககிசோ ரபாடா முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஐ.பி.எல் 2020 தொடரின் 55வது போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் டெல்லி கேபிடல்ஸின் வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா இந்த பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஏனெனில இந்த போட்டியில் ரபாடா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால், மொத்தம் 14 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா 13 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் பும்ரா 2 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தினால் மீண்டும் அதிக விக்கெட்கள் வீழ்த்தியோர் பட்டியிலில் அவர் முதலிடத்தை பிடிப்பார். 3-வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் சோப்ரா ஆர்ச்சர் உள்ளார்.





ஐபிஎல் 2020 தொடரில் இன்று நடைபெறும் 56-வது மற்றும் கடைசி லீக் போட்டி ரன்மழை பொழியும் சார்ஜா மைதானத்தில் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு நடைபெறுகிறது. இதிக் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள மும்பை அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய போராடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.

மும்பை அணியை பொறுத்தவரை இது வெறும் சம்பிரதாயப் போட்டிதான். இந்த போட்டியின் முடிவுகள் எந்த வகையிலும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனில் ஏற்கனவே அந்த அணி முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டது. அதனால் பயிற்சி போட்டியாக மட்டுமே இதை மும்பை கருத அதிக வாய்ப்புள்ளது.


அணியின் முக்கிய வீரர்களுக்கு இன்றைய போட்டியில் ஓய்வு தரப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசையிலும் சில புதுய மாற்றங்களை மும்பை அணி செய்து பார்க்கவும் வாய்ப்புள்ளது. சம்பிரதாயப் போட்டி எனக் கருதி தங்களது Momentum-ஐ எந்த காரணத்திற்காகவும் மும்பை விட்டுக் கொடுக்கக் கூடாது. காரணம் குவாலிஃபயர் சுற்றில் உற்சாகத்தோடு வீரர்கள் களமிறங்க இன்றைய வெற்றி அவசியமாகிறது.

ஐதராபாத்தை பொறுத்தவரை வெற்றி மட்டுமே இலக்காக இருக்கும். இந்த போட்டியில் வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடலாம் என்பதால் அணி வீரர்கள் மனதளவில் நிச்சயம் அழுத்தத்தில் இருப்பார்கள். இதையும் கடந்து வெற்றியை பதிவு செய்தாக வேண்டியது கட்டாயம். தொடக்க வீரராக சாஹவை களமிறக்கும் ஐதராபாத் அணியின் முடிவு சரியானதுதான் என்றாலும், இதற்காக பேரஸ்டோவை பென்சில் உட்கார வைப்பது நிச்சயம் அணிக்கு நல்லதல்ல.

அதுவும் முக்கியமான போட்டி என்பதால் இன்றைய பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. சந்தீப் சர்மா தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார். இதேபோல் மிடில் ஓவரில் ரஷித் கான் மற்றும் நடராஜன் எதிரணிக்கு கட்டாயம் நெருக்கடி தருவார்கள். இருப்பினும் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தால் ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி குறித்து யோசிக்க முடியும். ஒருவேளை ஐதராபாத் இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.இரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 8 போட்டிகளிலும் ஐதராபாத் 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
Published by:Vijay R
First published: