நிக்கோலஸ் பூரண் அதிரடி - டெல்லியை அணியை வீழ்த்தியது பஞ்சாப்

நிக்கோலஸ் பூரண் அதிரடி - டெல்லியை அணியை வீழ்த்தியது பஞ்சாப்

நிக்கோலஸ் பூரண்

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 • Share this:
  ஐ.பி.எல் தொடரின் 38-வது போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். கே.எல்.ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து, கிஹிஸ் கெயில் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய அவர், 13 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆடமிழந்தார். மயங்க் அகர்வாலும் 5 ரன்களில் ரன் அவுட்டானர். அதனால், பஞ்சாப் அணி நெருக்கடிக்கு உள்ளானது. தடுமாறிய அணியை நிக்கோலஸ் பூரன் அற்புதமான ஆட்டத்தால் மீட்டுக்கொண்டுவந்தார்.

  அதிரடியாக ஆடிய பூரனுக்கு க்ளென் மேக்ஸ்வெல் சிறந்த முறை பாட்னர்ஷிப் கொடுத்தார். அதிரடியாக ஆடிய பூரன் 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்திருந்தநிலையில், ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம், மேக்ஸ்வெல் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தார். அவர், 24 பந்துகளில் 32 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.


  தீபக் ஹூடாவும் அவர் பங்குக்கு 15 ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதன்மூலம் புள்ளிப் பட்டியில் பஞ்சாப் அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
  Published by:Karthick S
  First published: