விளையாட்டு

  • associate partner

அதிரடிய காட்டிய கெயில்: 185 ரன்களைக் குவித்த பஞ்சாப் அணி

ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களைக் குவித்துள்ளது.

அதிரடிய காட்டிய கெயில்: 185 ரன்களைக் குவித்த பஞ்சாப் அணி
கிறிஸ் கெயில்
  • Share this:
ஐ.பி.எல் தொடரின் 50-வது போட்டியில் ராஜஸ்தான் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மன்தீப் சிங் களமிறங்கினர். மன்தீப் சிங் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனையடுத்து, கிறிஸ் கெயில் களமிறங்கினர். கெயில், கே.எல்.ராகுல் இணை அதிரடியாக ஆடத் தொடங்கினர். இருவரும் எதிரணியின் பந்துவீச்சைச் சிதறடித்தனர். நிதானமாக ஆடிவந்த கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தநிலையில், பென்ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனையடுத்து, நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். அவரும், 22 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் கெய்ல் தொடர்ந்து அதிரடியாக ஆடினர். அதிரடியாக ஆடிய கெயில் 63 பந்துகளில் 6 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 99 ரன்கள் எடுத்திருந்தநிலையில், ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களைக் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
First published: October 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading