பந்து வீச்சில் மிரட்டிய மும்பை: 48 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் படுதோல்வி

மும்பை வீரர்கள்

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் பஞ்சாப் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

  • Share this:
    ஐ.பி.எல் தொடரின் 13-வது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குயின் டிகாக் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். முதலில் பேட் செய்த மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. அடுத்து பஞ்சாப் அணியின் சார்பில் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இருவரும், நிதானமான ஆட்டத்தை தொடங்கினர்.

    25 ரன்கள் எடுத்திருந்தநிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கருண் நாயர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ராகுல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரான் மட்டும் 44 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தது.
    PURPLE CAP:

    SCHEDULE TIME TABLE:

    அதன்மூலம் மும்பை அணியிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் படுதோல்வியடைந்தது. மும்பை அணி சார்பில் ஜேம்ஸ் பாட்டின்சன், பும்ரா, ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    Published by:Karthick S
    First published: