ஐபிஎல் 2020 தொடரின் லீக் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தற்போதைய சீசனில் அதிக பவுண்டரிகள் விளாசிய முதல் ஐந்து பேட்ஸ்மேன்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.
கே.எல்.ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) - 58 பவுண்டரிகள்:
இதுவரை நடந்த ஐ.பி.எல் 2020 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்துள்ள கே.எல்.ராகுல், அதிகபட்ச எண்ணிக்கையிலான பவுண்டரிகள் அடித்த சாதனையையும் படைத்துள்ளார். ஐபிஎல் 2020ல், 14 இன்னிங்ஸ்களில் கே.எல் ராகுல் 670 ரன்களை அடித்துள்ளார், அதில் 58 பவுண்டரிகள் மூலம் ரன்குவித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, பஞ்சாப் அணி பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. இருப்பினும் வேறு எந்த பேட்ஸ்மேனும் இதுவரை 500 ரன்கள் கூட எட்டாததால், அவர் கடைசி வரை ஆரஞ்சு தொப்பியை தக்க வைத்து கொள்ளலாம்.
ஷிகர் தவான் (டெல்லி கேப்பிட்டல்ஸ்)- 52 பவுண்டரிகள்:
இந்த சீசனில், அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரரான ஷிகர் தவான். இந்த பட்டியலில் தனது 52 பவுண்டரிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றில் 2-வது பிடித்துள்ளதால் தவான் இந்த பட்டியலில் முதல் இடம் பிடிக்க அதிகம் வாய்ப்புள்ளது.
சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்)- 49 பவுண்டரிகள்:
சூர்யகுமார் யாதவ் 49 பவுண்டரிகளுடன், அதிக பவுண்டரிகள் அடித்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் இந்த சீசனில் அதிக ரன்களை அடித்த முதல் பத்து இடத்தில் கூட இல்லை என்றாலும், அவரது 374 ரன்கள் நிறைய பவுண்டரிகளால் வந்துள்ளன. மேலும் இந்த இன்னும் அவர் விளையாடுவதற்கு, குறைந்தது இரண்டு போட்டிகளாவது உள்ளன. எனவே அவர் இந்த பட்டியலில் முதல் 2 இடங்களை முறியடிக்க ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேவதூத் படிக்கல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)- 46 பவுண்டரிகள்:
இந்த சீசனில் ஆர்.சி.பியின் அதிக வெற்றிக்கு தேவதூத் பாடிக்கல் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளார். அவர் தனது அணியில் அதிக ரன்கள் கொண்ட, விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் உள்ளார். அவர் அடித்த 422 ரன்களில், 46 பவுண்டரிகள் அடங்கும். மேலும் இந்த லீக் கட்டத்தில் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.
சுப்மன் கில் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)- 44 பவுண்டரிகள்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில், இதுவரை 440 ரன்கள் எடுத்து மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக திகழ்கிறார். அவர் ஒட்டுமொத்தமாக 44 பவுண்டரிகளையும் ஒன்பது சிக்ஸர்களையும் அடித்து, பிளே ஆஃப் இல் நுழைவதற்கு தனது அணிக்கு ஒரு அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளார்.
மேலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வாலும் 44 பவுண்டரிகள் அடித்துள்ளதால், கில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். ஆனால் மயங்க் இன் ஒட்டுமொத்த ரன்கள், கில்லின் 440 ரன்களுடன் ஒப்பிடும்போது 424 ஆகும்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்