ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை - புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்குச் சென்ற சென்னை

ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை - புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்குச் சென்ற சென்னை

மும்பை அணி வீரர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றுள்ளது.

 • Share this:
  ஐ.பி.எல் தொடரின் 20-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. அதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 2-வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

  அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதையடுத்து, ராஜஸ்தான் அணி 3 ஓவர்களில் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவரையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் ஜோஸ் பட்லர் மட்டும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார்.
  ORANGE CAP:

  அவர், 44 பந்துகளில் 70 ரன்களைக் குவித்து பாட்டிசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மும்பை அணியின் அசத்தலான பந்து வீச்சில் 18.1 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தது.
  RESULT DATA:

  அதன்மூலம், மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பில் 4 ஓவர்களை வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா.

  POINTS TABLE: மும்பை அணியானது ராஜஸ்தானை வீழ்த்திய நிலையில், அந்த அணி புள்ளிப்பட்டியலில் டாப் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், சென்னை அணி, ஐந்தாவது இடத்திற்கு சென்றுள்ளது.
  Published by:Karthick S
  First published: