கடைசி 6 ஓவர்களில் சூறாவளி ஆட்டம்: 191 ரன்கள் குவித்த மும்பை அணி

ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட்

பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களைக் குவித்துள்ளது.

  • Share this:
    ஐ.பி.எல் தொடரின் 13-வது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குயின் டிகாக் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். டிகாக் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்துகளமிறங்கிய சூர்யாகுமார் யாதவ்வும் 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர், களமிறங்கிய இஷான் கிஷான் நிதானமாக ஆடி 28 ரன்களைக் குவித்தார். மறுபுறம் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் ரோஹித் சர்மா 50 ரன்களைக் கடந்த பிறகு, தனது அதிரடியைக் காட்டினர்.

    அவர், 45 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா இணை பஞ்சாப் அணியின் பந்து வீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர். கடந்த போட்டிகளில் ஃபார்மின்றி தவித்த பாண்டியா, இந்த போட்டியில் தனது அதிரடியைக் காட்டினார். பொல்லார்ட் 20 பந்துகளில் 47 ரன்களும், ஹர்திக் 11 பந்துகளில் 30 ரன்களும் குவித்தனர்.
    MOST SIXES:
    PURPLE CAP:

    அதன்மூலம், மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களைக் குவித்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் மும்பை அணி 104 ரன்களைக் குவித்துள்ளது. காட்ரல், முகமது சமி, கிருஷ்ணப்பா கௌதம் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    Published by:Karthick S
    First published: