முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2020 | கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

IPL 2020 | கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

KKRvsMI

KKRvsMI

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் 13-வது சீசனின் 5-வது போட்டியில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதின. அபுதாபியில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, டி-காக் களமிறங்கினர். டி-காக் 1 ரன் எடுத்திருந்த நிலையில் சிவம் மவி பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் உடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா இருவரும் இணைந்து கொல்கத்தா பந்துவீச்சை சிதறவிட்டனர். சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாராதவிதமாக ரன்அவுட்டானார்.

மறுபுறம் அரைசதம் கடந்த ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது அதிரடியை தொடர்ந்தார். 54 பந்துகளில் 6 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் அடித்த ரோஹித் சர்மா சிவம் மாவி பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை 5 அணி விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்துள்ளது.

இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் சிக்கி திணறியது. தொடக்க வீரர்களான சுப்மன் கில் 7 ரன்னிலும், சுனில் நரைன் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.

கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் சற்று நேரம் பொறுமையாக விளையாடி 23 பந்துகளில் 30 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கொல்கத்தா அணியின் மற்றவீரர்களும் நிலைத்து நின்று விளையாடவில்லை.

கொல்கத்தா அணி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ரஷல் 11 ரன்னிலும், இயான் மார்கன் 16 ரன்னிலும் பும்ரா பந்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இறுதி ஓவர்களில் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் னமுடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் போட்டியில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி தனது வெற்றிகணக்கை தொடங்கி உள்ளது.

First published:

Tags: IPL 2020