HOME»NEWS»SPORTS»ipl ipl 2020 mumbai indians vs sunrisers hyderabad today vjr

ஐபிஎல் 2020 : மும்பையை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா சன்ரைசர்ஸ்?

IPL 2020 : ஐதராபாத்தை பொறுத்தவரை வெற்றி மட்டுமே இலக்காக இருக்கும். இந்த போட்டியில் வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடலாம்.

ஐபிஎல் 2020 : மும்பையை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா சன்ரைசர்ஸ்?
IPL 2020
  • Share this:

நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் காலடி எடுத்து வைக்க போகும் அணி எது என்பதை முடிவு செய்யும் முக்கியமான போட்டி இன்று நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் போட்டி ரன்மழை பொழியும் சார்ஜா மைதானத்தில் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு நடைபெறுகிறது. இதிக் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள மும்பை அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய போராடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.

மும்பை அணியை பொறுத்தவரை இது வெறும் சம்பிரதாயப் போட்டிதான். இந்த போட்டியின் முடிவுகள் எந்த வகையிலும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனில் ஏற்கனவே அந்த அணி முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டது. அதனால் பயிற்சி போட்டியாக மட்டுமே இதை மும்பை கருத அதிக வாய்ப்புள்ளது.



அணியின் முக்கிய வீரர்களுக்கு இன்றைய போட்டியில் ஓய்வு தரப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசையிலும் சில புதுய மாற்றங்களை மும்பை அணி செய்து பார்க்கவும் வாய்ப்புள்ளது. சம்பிரதாயப் போட்டி எனக் கருதி தங்களது Momentum-ஐ எந்த காரணத்திற்காகவும் மும்பை விட்டுக் கொடுக்கக் கூடாது. காரணம் குவாலிஃபயர் சுற்றில் உற்சாகத்தோடு வீரர்கள் களமிறங்க இன்றைய வெற்றி அவசியமாகிறது.

ஐதராபாத்தை பொறுத்தவரை வெற்றி மட்டுமே இலக்காக இருக்கும். இந்த போட்டியில் வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடலாம் என்பதால் அணி வீரர்கள் மனதளவில் நிச்சயம் அழுத்தத்தில் இருப்பார்கள். இதையும் கடந்து வெற்றியை பதிவு செய்தாக வேண்டியது கட்டாயம். தொடக்க வீரராக சாஹவை களமிறக்கும் ஐதராபாத் அணியின் முடிவு சரியானதுதான் என்றாலும், இதற்காக பேரஸ்டோவை பென்சில் உட்கார வைப்பது நிச்சயம் அணிக்கு நல்லதல்ல.

அதுவும் முக்கியமான போட்டி என்பதால் இன்றைய பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. சந்தீப் சர்மா தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார். இதேபோல் மிடில் ஓவரில் ரஷித் கான் மற்றும் நடராஜன் எதிரணிக்கு கட்டாயம் நெருக்கடி தருவார்கள். இருப்பினும் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தால் ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி குறித்து யோசிக்க முடியும். ஒருவேளை ஐதராபாத் இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

இரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 8 போட்டிகளிலும் ஐதராபாத் 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.















ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: