விளையாட்டு

  • associate partner

MIvsKKR | மும்பை, கொல்கத்தா அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன?

MIvsKKR | கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி என்றாலே அது மும்பை அணிக்கு அல்வா சாப்பிடுவது போன்றது.

MIvsKKR | மும்பை, கொல்கத்தா அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன?
IPL 2020
  • Share this:
அபுதாபி மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் தொடரின் 32 ஆவது லீக் போட்டியில் மும்பை அணி - கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இரவு ஏழு முப்பது மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.

கொல்கத்தா அணி கடைசியாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கி படுதோல்வியை சந்தித்தது. இது பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும் அளவுக்கு கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையில் வலுவாக இல்லை என்பதற்கு உதாரணம்.

அதேசமயம் அந்த அணியின் பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பலமாக உள்ளது. பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கிய சுனில் நரேன் இன்றைய போட்டியில் களமிறங்குவாரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இவருக்கு பதிலாக முந்தைய போட்டியில் ஓப்பனிங்கில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இதனால் திரிபாதியே இன்றைய போட்டியில் ஷுப்மன் கில் (shubman gill) உடன் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.


கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி என்றாலே அது மும்பை அணிக்கு அல்வா சாப்பிடுவது போன்றது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா கொல்கத்தாவுக்கு எதிராக சிறப்பான ரெக்கார்டுகளை கொண்டுள்ளார். ஒன் டவுனில் களமிறங்கும் சூரியகுமார் சிறப்பான பார்மில் இருக்கிறார்.

இஷான் கிஷன்,. பொல்லார்டு மற்றும் பாண்டியா சகோதரர்கள் என பேட்டிங் வரிசை நீள்கிறது. இருப்பினும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிறு சிறு தவறுகளால் கடைசி ஓவர் வரை வெற்றிக்கு போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த தவறுகளை மும்பை அணி கண்டறிந்து சரி செய்திருக்கும் என்று நம்பப்படுகிறது. நடப்பு தொடரில் வலிமையான பந்துவீச்சாளர்களை கொண்ட அணியில் மும்பையும் ஒன்று. இதனால் எதிரணி வீரர்களை இவர்கள் திக்குமுக்காட செய்யப்போகிறார்கள் என்பது நிதர்சனம்.

இரு அணிகளும் இதற்கு முன்பு மோதிய லீக் ஆட்டத்தில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 20 போட்டிகளிலும் கொல்கத்தா அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading