முகப்பு /செய்தி /விளையாட்டு / KKRvsMI | வெளுத்து வாங்கிய ஹிட்மேன்... கொல்கத்தா அணிக்கு 196 ரன்கள் இலக்கு

KKRvsMI | வெளுத்து வாங்கிய ஹிட்மேன்... கொல்கத்தா அணிக்கு 196 ரன்கள் இலக்கு

KKRvsMI

KKRvsMI

IPL 2020 | சூர்யகுமார் யாதவ் உடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா இருவரும் இணைந்து கொல்கத்தா பந்துவீச்சை சிதறவிட்டனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் அந்த அணி 195 ரன்கள் குவித்துள்ளது.

ஐ.பி.எல் 13-வது சீசனின் 5-வது போட்டியில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதின. அபுதாபியில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, டி-காக் களமிறங்கினர். டி-காக் 1 ரன் எடுத்திருந்த நிலையில் சிவம் மவி பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் உடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா இருவரும் இணைந்து கொல்கத்தா பந்துவீச்சை சிதறவிட்டனர். சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாராதவிதமாக ரன்அவுட்டாகினார்.

மறுபுறம்  அரைசதம் கடந்த ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது அதிரடியை தொடர்ந்து கொண்டே இருந்தார். 54 பந்துகளில் 6 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் அடித்த ரோஹித் சர்மா சிவம் மவி பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை 5 அணி விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்துள்ளது.

First published:

Tags: IPL 2020