அதிரடி தொடக்கம்: சூர்யா குமார் யாதவ் அசத்தல் ஆட்டம் -193 ரன்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ்

அதிரடி தொடக்கம்: சூர்யா குமார் யாதவ் அசத்தல் ஆட்டம் -193 ரன்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ்

சூர்யாகுமார் யாதவ்

ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் 190 ரன்கள் குவித்துள்ளது.

  • Share this:
ஐ.பி.எல் தொடரின் 20-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குயின் டிகாக் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். இருவரும் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பவர்ப்ளேயில் இருவரும் அதிரடியை வெளிப்படுத்தினர். 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிகாக் கார்த்திக் தியாகி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.

அவரைத் தொடர்ந்து, ரோஹித் சர்மா 23 பந்துகளில் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித் ஆட்டமிழந்த அடுத்த பந்தில் இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுபுறம், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடினார். குர்ணால் பாண்டியா 12 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். சூர்யா குமார், ஹர்திக் இணை அதிரடியாக ஆடினர்.
PURPLE CAP:
RESULT DATA:

இந்த ஜோடி 76 ரன்களைக் குவித்தது. அதிரடியாக ஆடிய சூர்யாகுமார் யாதவ் 47 பந்துகளில் 79 ரன்களும், ஹர்திக் பாண்டியா 19 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 193 ரன்களைக் குவித்தது.
Published by:Karthick S
First published: