விளையாட்டு

  • associate partner

தனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி

பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி
சூர்யாகுமார் யாதவ்
  • Share this:
ஐ.பி.எல் தொடரின் 48-வது போட்டியில் மும்பை அணியும் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குயின் டி காக் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். டிகாக் 18 ரன்களிலும், கிஷன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மும்பை அணி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் சூர்யகுமார் யாதவ் அணியை சரிவிலிருந்து மீட்டார்.

தொட்டகம் முதலே அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கத் தொடங்கினார். திவாரி 5 ரன்களிலும், குர்ணால் பாண்டியா 10 ரன்களிலும் அவுட் என ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தாலும் மறுபுறம் சூர்யகுமார் ரன்களைக் குவித்துக்கொண்டிருந்தார். இறுதிவரை போராடியஅவர், அவுட்டாகமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:

ORANGE CAP:

PURPLE CAP: RESULT DATA:

MOST SIXES:

19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 166 ரன்களைக் குவித்தது. அதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading