• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சுத் தேர்வு

டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சுத் தேர்வு

விராட், கோலி

விராட், கோலி

பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத்தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பெங்களூரு - மும்பை அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் நடப்பு தொடரில் தலா 2 போட்டிகளில் விளையாடி தலா ஒன்றில் வென்றுள்ளன. பெங்களூரு அணி தனது முந்தைய போட்டியில் பஞ்சாப் அணியிடம் மோசமாக தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் தொடக்க வீரர் பின்ச் சரியான பார்ம் இல்லாமல் தடுமாறி வருகிறார். இதேபோல் கேப்டன் விராட் கோலியும் முந்தைய போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிராக ஃபீல்டிங்கிலும் இவர் சொதப்பியது அதிர்ச்சியாக அமைந்தது.

    டிவில்லியர்ஸ் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது. பந்துவீச்சை பொறுத்தவரை சஹல், சைனி, துபே நம்பிக்கை அளிக்கின்றனர். வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், ஸ்டெய்ன் ஆகியோர் விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருவது பெங்களூரு அணிக்கு பலவீனமாக உள்ளது.

    மும்பை அணி தனது முதல் போட்டியில் சென்னைக்கு எதிராக தோல்வியைத் தழுவிய போதும், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக சிறப்பான கம்பேக் கொடுத்தனர். கடந்த சில சீசனாக பெரிய ஸ்கோரை பதிவு செய்யாத மும்பை கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.
    ORANGE CAP:
    RESULT DATA:

    சூர்ய குமார் யாதவ், சவுரவ் திவாரி ஆகியோரும் பேட்டிங்கில் அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் உள்ளனர். டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: