சிங்கம் பட சூர்யா கெட்டப்பில் தல தோனி... கவனம் பெறும் நியூலுக்

மகேந்திர சிங் தோனி ( நன்றி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

முறுக்கு மீசை உடன் அவர் களமிறங்கி உள்ளது சிங்கம் படத்தில் வரும் சூர்யாவின் கெட்டப் போன்று இருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 • Share this:
  ஐ.பி.எல் தெடரில் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கிய தோனியின் புதிய தோற்றம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

  கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் பெரும் பரபரப்புடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஐ.பி.எல் 13-வது சீசன் இன்று தொடங்கியது. அபுதாபயில் தொடங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியும் மோதுகின்றன.

  இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். மாலையில் பனிப்பொழிவு இருப்பதால் முதலில் பந்துவீசுவது எளிதாக இருக்கும் என்று தோனி கூறினார்.

  டாஸ் போடுவதற்கு தோனி களத்தில் வந்த போது அவரது புதிய கெட்டப் அனைவரையும் கவர்ந்துள்ளது. முறுக்கு மீசை உடன் அவர் களமிறங்கி உள்ளது சிங்கம் படத்தில் வரும் சூர்யாவின் கெட்டப் போன்று இருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  மேலும் தோனியின் புதிய கெட்டப் மிரட்டலாக உள்ளதாக தோனியின் ரசிகர்கள் பலரும் கருத்தும் தெரிவித்துள்ளனர். இன்றையப் போட்டியில் வாட்சன், டூபிளெசிஸ், சாம் குரான், லுங்கி நிகிடி ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
  Published by:Vijay R
  First published: