டாஸூக்கு பின் தோனி கேட்ட கேள்வி.. அம்பயர் உட்பட அனைவரும் ஷாக்

எம்.எஸ்.தோனி (நன்றி ; ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

IPL 2020 | MS Dhoni |

 • Share this:
  மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி டாஸூக்கு பின் கேட்ட கேள்வி அனைவருக்கும் ஷாக்கிங்காக இருந்தது.

  அபுதாபியில் நேற்று தொடங்கிய ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் சி.எஸ்.கே அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

  இதையடுத்து களமிறங்கிய சி.எஸ்.கே அணியில் அம்பதி ராயுடுவின் அதிரடியான ஆட்டத்தால் சி.எஸ்.கே வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி 71 ரன்கள் குவித்த அம்பதி ராயுடு ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

  இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸூக்கு பின் தோனி கமெண்டர் முரளி கார்த்தியிடம் பேசினார். அப்போது, “போட்டியின் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று அறிவுறத்தப்பட்டுள்ளது. போட்டிக்கு முன் நடுவர்களிடம் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஃபர்ஸ்ட் ஸ்லிப் (விக்கெட் கீப்பருக்கு அருகில் ஃப்ல்டிங் செய்வது) நிற்க வைக்கலாமா? என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்“ என்றார்.

  தோனியின் இந்த கேள்வியை கேட்ட அம்பயர்கள் சற்று நேரம் அதிர்ச்சியடைந்தனர். பின் அவர் கேலியாக இந்த கேள்வியை கேட்பது தெரிந்து முரளி கார்த்தி உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.  மகேந்திர சிங் தோனி இந்த போட்டியில் 7-வது வீரராக களமிறங்கினார். வெறும் 2 பந்துகளை சந்தித்த தோனி இந்தப் போட்டியில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இதனால் தோனியின் அதிரடியான ஆட்டத்தை பார்க்கலாம் என்று நீண்ட நாட்களாக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
  Published by:Vijay R
  First published: