முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2020 | ராஜஸ்தான் அணிக்கு எதிராக 7-வது வீரராக களமிறங்கியது ஏன்? தோனி விளக்கம்

IPL 2020 | ராஜஸ்தான் அணிக்கு எதிராக 7-வது வீரராக களமிறங்கியது ஏன்? தோனி விளக்கம்

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 7-வது வீரராக களமிறங்கியதற்கான காரணத்தை சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் 13-வது சீசனின் 4-வது போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் சி.எஸ்.கே கேப்டன் மகேந்திர சிங் தோனி 7-வது வீரராக களமிறங்கினார்.

இந்த போட்டியில் 17 பந்துகளை எதிர்கொண்ட தோனி 29 ரன்கள் மட்டுமே விளாசினார். கடைசி ஓவரில் தோனி ஹட்ரிக் சிக்ஸர் அடித்தாலும் அது பயனாற்றதாகவே இருந்தது. இந்த போட்டிக்கு பின் பேசிய தோனி 7-வது வீரராக ஏன் களமிறங்கினேன் என்றும் விளக்கமளித்தார்.

அப்போது, “நான் நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்ட பின் பயிற்சியும் சற்று குறைவாகவே இருந்தது. மேலும் சில வித்யாசமான முடிவுகளை முயற்சி செய்தேன். அதற்காக தான் சாம் கரணை முன்பே இறக்கினோம். சோதனை முயற்சி பலன் தரவில்லை என்றால் பழைய நிலைக்கு திரும்பலாம். டூ-பிளசிஸ் மிகவும் அருமையாக ஆடினார். இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவே திட்டமிட்டோம்“ என்றார்.

POINTS TABLE:

நேற்று முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 216 ரன்கள் எடுத்தது. சாம்சன் மற்றும் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் இருந்து சூப்பர் இன்னிங்ஸ் விளையாடினர். சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்களும், ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்களும் எடுத்தனர்.

ஆர்ச்சர் எட்டு பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்கோர்போர்டில் 200 ரன்கள் எடுத்தது. எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சி.எஸ்.கேவில் இருந்து, டு பிளெசிஸ் 37 பந்துகளில் 72 ரன்களும், வாட்சன் 21 ரன்களில் 33 ரன்களும், தோனி 17 ரன்களில் 29 ரன்களும் எடுத்தனர்.

ORANGE CAP:

இந்த ஆட்டத்திற்கு முன்பு தோனி தலைமையிலான சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸை நான்கு பந்துகள் மீதமுள்ள நிலையில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸுக்கு இது சீசனின் முதல் ஆட்டமாகும். இதனை தொடர்ந்து செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாபை எதிர்கொள்ளும், சென்னை சூப்பர் கிங்ஸ் செப்டம்பர் 25ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் உடன் மோத உள்ளது.

First published:

Tags: CSK, IPL 2020