விளையாட்டு

  • associate partner
Home » News » Sports » IPL IPL 2020 MATCHES SCHEDULE SKD

சி.எஸ்.கே - மும்பை இந்தியன்ஸ் மோதலுடன் தொடங்கும் ஐ.பி.எல்- 46 லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை

ஐ.பி.எல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

சி.எஸ்.கே - மும்பை இந்தியன்ஸ் மோதலுடன் தொடங்கும் ஐ.பி.எல்- 46 லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை
ஐ.பி.எல்
  • Share this:
கொரோனா காரணமாக இந்தியாவில் இந்தாண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடந்திருக்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளைச் சேர்ந்த வீரர்களும், பிசிசிஐ அதிகாரிகளும் அமீரக நாடுகளுக்கு சென்றுள்ளனர்.அனைத்து அணியைச் சேர்ந்த வீரர்களும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றுள்ள நிலையில், போட்டிக்கான அட்டவணை வெளியீட்டை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து வந்தனர்.
இந்தநிலையில், ஐ.பி.எல் நிர்வாகக் குழு, ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19-ம் தேதி ஐ.பி.எல் போட்டி தொடங்குகிறது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. மொத்தம் 46 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. துபாயில் 24 போட்டிகளும், அபுதாபியில் 20 போட்டிகளும், சார்ஜாவில் 12 போட்டிகளும் நடைபெறவுள்ளன.
First published: September 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading