ஐபிஎல் 2020: அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள்

ஐபிஎல் 2020: அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள்

அபுதாபி மைதானம்

அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகள் குறித்து பார்க்கலாம்.

 • Share this:
  இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதத்தில் தொடங்கவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து  போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

  இதனையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2020 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட நாட்டின் மூன்று வெவ்வேறு இடங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.

  இந்தியன் பிரீமியர் லீக்கின் 13வது சீசன் செப்டம்பர் 19 முதல் தொடங்க உள்ளது. ஷார்ஜா ஸ்டேடியத்தில் இந்த தொடரில் 12 போட்டிகளும், துபாயில் 24 போட்டிகள், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் 20 போட்டிகளும் நடைபெறுகிறது. இந்த நிலையில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியம் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சுவரஸ்யமான விஷயங்கள் குறித்து இங்கு காண்போம்.

  அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியம் :

  ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் அமைந்துள்ள ஷேக் சயீத் ஸ்டேடியம் 2004ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஹிஸ் ஹைனஸ் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் பெயரிடப்பட்டது.

  இந்த கிரிக்கெட் அரங்கத்தில் ஒரே நேரத்தில் 20,000 பார்வையாளர்கள் அமரும் படி உள்ளது. மேலும் ஃப்ளட்லைட்களையும் கொண்டுள்ளது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியம் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும்.

  மைதானத்தில் முதல் போட்டி நவம்பர் 2004ல் ஸ்காட்லாந்து மற்றும் கென்யா நாடுகளுக்கிடையே நடைபெற்றது.

  ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2020 லீக்கில் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடைபெறும். இந்தப் போட்டி செப்டம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது.

  அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டிகள் :

  செப்டம்பர் 19 - 7:30 PM : மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்

  செப்டம்பர் 23 - 7:30 PM :  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்

  செப்டம்பர் 26 - 7:30 PM : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  செப்டம்பர் 29 - 7: 30 PM : டெல்லி கேபிட்டல்ஸ்  vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  அக்டோபர் 1 - 7: 30 PM :  கிங்ஸ் XI பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ்

  அக்டோபர் 3 - 3: 30 PM : ராயல் சாலன்ஞ்சர்ஸ் பெங்களூர் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்

  அக்டோபர் 6 - 7: 30 PM  : மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

  அக்டோபர் 10 - 3: 30 PM :  கிங்ஸ் XI பஞ்சாப் vs கொல்கத்தா நைட்  ரைடர்ஸ்

  அக்டோபர் 11 - 7: 30 PM : மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ்

  அக்டோபர் 16 - 7: 30 PM : மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்  ரைடர்ஸ்

  அக்டோபர் 18 - 3: 30 PM : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  அக்டோபர் 21 - 7: 30 PM  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

  அக்டோபர் 24 - 3: 30 PM கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ்

  அக்டோபர் 25 - 7: 30 PM  ராஜஸ்தான் ராயல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்

  அக்டோபர் 28 - 7: 30 PM :  மும்பை இந்தியன்ஸ் vs ராயல்  சேலஞ்சர்ஸ் பெங்களூரு

  அக்டோபர் 30 - 7: 30 PM :  கிங்ஸ் XI பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ்


  நவம்பர் 1 - 3:30 PM : சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப்

  நவம்பர் 2 - 7: 30 PM : டெல்லி கேபிடல்ஸ் vs  ராயல்  சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற உள்ளது.
  Published by:Karthick S
  First published: