ஐபிஎல் 2020 - 1984-ல் ஆசியக் கோப்பை போட்டிகள் நடந்த ஜார்ஜா மைதானத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

ஐபிஎல் 2020 - 1984-ல் ஆசியக் கோப்பை போட்டிகள் நடந்த ஜார்ஜா மைதானத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்

நாடு முழுவதும் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஐ.பி.எல் (டி 20 தொடர்) வரும் சில நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது.

 • Share this:
  இந்தியன் பிரீமியர் லீக்கின் 13-வது சீசன், செப்டம்பர் 19 முதல்  தொடங்க உள்ளது.  கொரோனா வைரஸ் பரவுவதால் இந்த ஆண்டு ஐபிஎல் நடக்கும் இடத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி 2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட நாட்டின் மூன்று வெவ்வேறு இடங்களில்  போட்டிகள் நடைபெறவுள்ளது.

  இந்த தொடரில் அபுதாபியில் 20 போட்டிகள், துபாயில்  24 போட்டிகள்  மற்றும் ஷார்ஜா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் 12 போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல்இன் 13-வது சீசன், மார்ச் மாதத்தில் தொடங்கவிருந்தது, ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, பின்னர்  ஒத்திவைக்கப்பட்டது.

  செப்டம்பர் 19 முதல் தொடங்கவிருக்கும் போட்டிகளைக் காண நாம் அனைவரும் தயார் நிலையில் உள்ளதால், ஷார்ஜா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

   ஷார்ஜா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்

  ஐக்கிய அரபு அமீரகத்தில், ஷார்ஜாவில் அமைந்துள்ள ஷார்ஜா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம் 1980களின் முற்பகுதியில் கட்டப்பட்டது. இருப்பினும், இது பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. அங்கு முதல் சர்வதேச போட்டிகளாக ஏப்ரல் 1984 இல் ஆசிய கோப்பையின் போட்டிகள் நடைபெற்றன.

  2010ஆம் ஆண்டில், ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான ஒருநாள் சர்வதேச மற்றும் முதல் தர போட்டிகளுக்கான சொந்த மைதானமாக தேர்வு செய்யப்பட்டது. இருப்பினும், பின்னர் அவர்கள் தங்கள் தளத்தை இந்தியாவின் நொய்டாவில் உள்ள கிரேட்டர் நொய்டா விளையாட்டு வளாக மைதானத்திற்கு மாற்றினர். இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டி ஜனவரி 2002ல் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நடைபெற்றது.

  ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2020 லீக்கின் முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடைபெறும். இந்தப் போட்டியானது செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஷார்ஜா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள்...

  செப்டம்பர் 22 - இரவு 7:30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்

  செப்டம்பர் 27 - இரவு 7:30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்

  அக்டோபர் 3 - இரவு 7:30 மணிக்கு டெல்லி கேபிடல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  அக்டோபர் 4 - இரவு 3:30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  அக்டோபர் 9 - இரவு 7:30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ்

  அக்டோபர் 12 - இரவு 7:30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  அக்டோபர் 15 - இரவு 7:30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கிங்ஸ் லெவன் புஞ்சாப்

  அக்டோபர் 17 - இரவு 7:30 மணிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்

  அக்டோபர் 23 - இரவு 7:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்

  அக்டோபர் 26 - இரவு 7:30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்


  அக்டோபர் 31 - இரவு 7:30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  நவம்பர் 3 - இரவு 7:30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs மும்பை இந்தியன்ஸ்
  Published by:Karthick S
  First published: