துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு ஐது.பி.எல். தொடரின் 22-வது லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் ஐதராபாத் - பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. ஐதராபாத் அணியின் பலம் அதன் பந்துவீச்சுதான். ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சு யுக்தியை தொடர்ந்து மாற்றி வருகிறார் கேப்டன் டேவிட் வார்னர். இவருக்கு பக்கபலமாக இருந்து களத்தில் பல்வேறு ஆலோசனைகளை கேன் வில்லியம்சன் வழங்குவது கூடுதல் பலம். தேவைப்படும் நேரங்களில் பந்துவீச்சிலும் கைகொடுக்கும் வில்லியம்சன் பேட்டிங்கில் எப்போது பார்முக்கு திரும்புவார் என்பதைதான் அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். காரணம் ஐதராபாத் அணியின் பேட்டிங் வரிசை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
பேர்ஸ்டோ - வார்னர் இணை அணிக்கு சிறப்பான தொடக்கம் தர தவறி வருகிறது. மணீஷ் பாண்டே ஒரு போட்டியில் பேட்டிங்கில் கைகொடுத்தால் பல போட்டிகளில் காலை வாரி விடுகிறார். தலைசிறந்த பீல்டரான இவர், கடந்த இரு போட்டிகளிலும் கேட்சுகளை மிஸ் செய்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மிடில் ஆர்டரில் ஐதராபாத் அணியை வழிநடத்த வீரர்கள் இல்லை என்பதுதான் நிதர்சனம். இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டால் மட்டுமே ரேஸில் ஐதராபாத்தால் நிலைக்க முடியும். காயம் காரணமாக புவனேஷ்வர்குமார் தொடரில் இருந்து விலகியது ஐதராபாத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.
Live Score:
POINTS TABLE:
பஞ்சாப் அணியை பொறுத்தவரை அதன் பேட்டிங் மிகப் பெரிய பலவீனம். கேப்டன் கே.எல்.ராகுல் மட்டும் மயங்க் அகர்வால் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். மன்தீப் சிங் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரும் சிறிது நம்பிக்கை தருகின்றனர். இவர்களுக்குப் பின் அணியை வழிநடத்த போவது யார் என்ற கேள்வி எழும் பட்சத்தில் அதற்கான பதில் நிச்சயம் பஞ்சாப் இடமில்லை. கடைசி கட்டத்தில் களமிறங்கி ஸ்கோரை உயர்த்தும் வீரர்கள் இல்லாதது நிச்சயம் இந்த அணிக்கு பின்னடைவு தான். ஷமி, காட்ரெல் என பலமான பந்துவீச்சு வரிசையை கொண்டிருக்கும் பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய சென்னைக்கு எதிரான போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறியது.
எதிரணி வீரர்கள் என்னதான் சிறப்பாக விளையாடினாலும் அவர்களது ஏதாவது ஒரு பலவீனத்தை உணர்ந்து பந்துவீச வேண்டியது கட்டாயம். அதை கேப்ட. கே.எல்.ராகுல் செய்யத்தவறி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இவருக்கு கேப்டன்சியில் ஆலோசனைகள் வழங்க அணியில் அனுபவ வீரர்கள் இல்லையோ என்ற ஐயம் எழுகிறது. தனது கேப்டன்சியில் உள்ள குறைபாடுகளை கே.எல்.ராகுல் நிச்சயம் சரிசெய்தாக வேண்டும்....
இரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் ஹைதராபாத் 10 ஆட்டங்களிலும் பஞ்சாப் நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் புள்ளி பட்டியலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2020