HOME»NEWS»SPORTS»ipl ipl 2020 live score csk vs kxip todays match at abu dhab yuv

IPL 2020 Live Score, CSK vs KXIP: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு

இன்றைய போட்டியில் சென்னை வென்றால் ஹாட்ரிக் வெற்றி மட்டுமல்லாமல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்கவும் வாய்ப்புள்ளது.

IPL 2020 Live Score, CSK vs KXIP: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு
சென்னை - பஞ்சாப் போட்டி
  • Share this:

ஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் சற்றுமுன் தொடங்கியது. இதில் பிளே ஆஃப் ரேசில் இல்லாத சென்னை அணியும், ரேசில் தொடர கட்டாய வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.  இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தேர்வு செய்துள்ளது.  

சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவருமே குறைந்தபட்சம் ஒரு போட்டியில் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தியுள்ளனர். கேப்டன் தோனி மட்டுமே இதற்கு விதி விலக்காக உள்ளார். இன்றைய போட்டியில் சென்னை வென்றால் ஹாட்ரிக் வெற்றி மட்டுமல்லாமல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்கவும் வாய்ப்புள்ளது.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை தோல்வி என்ற வார்த்தையை யோசித்தாலே தொடரில் இருந்து வெளியேறிவிட வேண்டியதுதான். பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே வெற்றியை பற்றி யோசிக்கவே முடியும்.



போட்டி லைவ் ஸ்கோர்:



சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

1. டு பிளசிஸ்,
2. கெய்க்வாட்,
3. அம்பதி ராயுடு,
4. எம்எஸ் தோனி,
5. என் ஜெகதீசன்,
6. ஜடேஜா,
7. சாம் கர்ர்,
8. ஷர்துல் தாகூர்.
9. தீபக் சாஹர்,
10. லுங்கி நிகிடி,
11. இம்ரான் தாஹிர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:

1. கேஎல் ராகுல்,
2. மயங்க் அகர்வால்,
3. கிறிஸ் கெய்ல்,
4. நிக்கோலஸ் பூரன்,
5. மந்தீப் சிங்,
6. ஜேம்ஸ் நீசம்,
7. தீபக் ஹூடா,
8. கிறிஸ் ஜோர்டான்,
9. முருகன் அஸ்வின்,
10. ரபி பிஷ்னோய்,
11. முகமது ஷமி



இரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை அணி 14 போட்டிகளிலும் பஞ்சாப் 9 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

இன்றைய நாளின் இரண்டாவது போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா அணி ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.

இரு அணிகளுக்குமே இது வாழவா சாவா போட்டிதான். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை கடைசி இரண்டு போட்டிகளிலும் அந்த பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. பென் ஸ்டோக்சின் அசுரத்தமான பார்முக்கு முன்னால் எதிரணி பவுலர்கள் வாயடைத்துப் போயுள்ளனர். பட்லர், உத்தப்பா, சஞ்சு சாம்சன், ஸ்மித் என பேட்டிங்கில் மிரட்ட ராஜஸ்தான் அணி வரிசைகட்டி காத்துள்ளது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆர்ச்சரை மட்டுமே நம்பியிருந்தது. கடந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கில் கை கொடுத்தார். இன்றும் அவரது ஆதிக்கம் தொடர்ந்தால் மட்டுமே எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியும்.

கொல்கத்தா அணி கடைசி 5 போட்டிகளில் பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் தொடர்ந்து சொதப்பியதால் தற்போது பிளே ஆஃப் வாய்ப்பை பெற போராட வேண்டிய நிலையில் உள்ளது. இந்த அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடக் கூடிய வீரர் என்று ஒருவர் கூட இல்லை. Bench-லும் பெரிய வீரர்கள் இல்லாததால் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம் செய்ய முடியாத சூழல் உள்ளது. இப்படி எங்கு பார்த்தாலும் பிரச்னைகள் மட்டுமே உள்ள கொல்கத்தா அணி இந்த தடை கற்களை படி கற்களாக மாற்றி மாயஜாலம் நிகழ்த்தினால் மட்டுமே பிளே ஆஃப் கனவை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.

இரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியதில் கொல்கத்தா அணி 11 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் 10 போட்டிகளிலும் வென்றுள்ளன.













ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
Published by:Yuvaraj V
First published: