முகப்பு /செய்தி /விளையாட்டு / KXIPvsRCB | பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்த பெங்களூரு

KXIPvsRCB | பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்த பெங்களூரு

IPL 2020 | KXIPvsRCB | கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கே.எல்.ராகுல் 69 பந்துகளில் 132 ரன்கள் விளாசினார்.

  • 1-MIN READ
  • Last Updated :

ஐ.பி.எல் 2020 தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி படுதோல்வியடைந்தது.

ஐ.பி.எல் 13-வது சீசனின் 6-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தனி ஆளாக நின்று அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் இன்றையப் போட்டியில் 26 ரன்களில் சஹால் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அதற்கு அடுத்து களமிற்ங்கிய நிக்கோலஸ் பூரான் 17 ரன்னில் ஷிவம் துபே பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

மற்றொரு முனையில் பொறுப்புடன் விளைாயடிய கேப்டன் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சிதறவிட்டார். இறுதி ஓவர்களில் அதிரடியில் மிரட்டிய கே.எல்.ராகுல் சதம் விளாசி அத்தினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கே.எல்.ராகுல் 69 பந்துகளில் 132 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் படிக்கல் ஒரு ரன்னிலும், ஜோஸ் பிலிப் ரன் ஏதும் எடுக்காமலும் கேப்டன் விராட் கோலி ஒரு ரன்னிலும் அவுட்டாகி அடுத்தடுத்து அதிர்ச்சியளித்தனர். பெங்களூரு அணி 4 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை பறிக்கொடுத்து தடுமாறியது.

அடுத்த வந்த எந்த வீரரும் சோபிக்காததால் பெங்களூரு அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்து 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பெங்களூரு அணியில் வாஷிங்டன் சுந்தர் 30 ரன்கள் அடித்ததே அதிகப்டசமாகும். பஞ்சாப் அணி சார்பில் ரவி பிஷோனி மற்றும் முருகன் அஸ்வின் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

First published:

Tags: IPL 2020