விளையாட்டு

  • associate partner

KXIPvRCB | 6 பந்துகளுக்கு 2 ரன்கள்... கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப்

RCBvsKXIP | ஆரம்பத்தில் நிதானம் காட்டிய கெயில் அதன்பின் தனது வழக்கமான அதிரடியால் பந்துகளை மைதானத்தைத விட்டு வெளியே பறக்கவிட்டார். 

KXIPvRCB | 6 பந்துகளுக்கு 2 ரன்கள்... கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப்
RCBvKXIP
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் 2020 தொடரின் 31-வது லீக் போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு மோதின. ஷார்ஜா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பின்ச் மற்றும் படிக்கல் களமிறங்கினர். படிக்கல் 18 ரன்னிலும், பின்ச் 20 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். இந்த தொடரில் பொறுப்புடன் விளையாடி வரும் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி இன்றையப் போட்டியிலும் சிறப்பாக விளையாடினார்.


பெங்களூரு அணியில் வழக்கமாக 4-வது வீரராக களமிறங்கும் டி-வில்லியர்ஸ்க்கு பதிலாக மாற்று வீரர்க்கு வாய்ப்பளிக்கப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் இன்றையப் போட்டியில் 4-வது வீரராக களமிறங்கினார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 13 ரன்களும் அடுத்து வந்த ஷிவம் துபே 23 ரன்னிலும் அவுட்டாகினர்.

கடைசி ஓவர்களில் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டி-வில்லியர்ஸ் 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். கேப்டன் விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று ஆடி 39 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஷமி பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி பெங்களூரு அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். பஞ்சாப் அணி 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் 45 ரன்களில் சஹால் பந்துவீச்சில் அவுட்டானார்.

இதை தொடர்ந்து அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் களமிறங்கினார். இந்த தொடரில் கெய்ல்க்கு இதுவே முதல் போட்டியாகும். ஆரம்பத்தில் நிதானம் காட்டிய கெயில் அதன்பின் தனது வழக்கமான அதிரடியால் பந்துகளை மைதானத்தைத விட்டு வெளியே பறக்கவிட்டார்.

கே.எல்.ராகுல், கெயில் இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தனர். இறுதி ஓவர்களில் தடுமாறிய பஞ்சாப் அணி கடைசி ஓவரில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சஹால் பந்துவீசினார்.

முதல் இரண்டு பந்துகளில் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் 3-வது பந்தில் ஒரு ரன்னும், 4-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல், 5-வது பந்தில் கே.எல்.ராகுல் ஒரு ரன் எடுக்க முயன்ற போது கெய்ல் ரன் அவுட்டானார். இதனால் போட்டியில் பரபரப்பான முடிவுக்கு சென்றது. ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்க வேண்டுமென்ற நிலையில் நிக்லோஸ் பூரான் களமிறங்கி கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.

இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் 8 போட்டிகளில் விளைாயடி உள்ள பஞ்சாப் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த 2 போட்டிகளும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி தான் என்பது குறிப்பிடதக்கது.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading