முகப்பு /செய்தி /விளையாட்டு / KXIPvsRCB | சதம் விளாசிய கே.எல்.ராகுல்... பெங்களூரு அணிக்கு இமாலய இலக்கு

KXIPvsRCB | சதம் விளாசிய கே.எல்.ராகுல்... பெங்களூரு அணிக்கு இமாலய இலக்கு

IPL 2020 | KXIPvsRCB | கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கே.எல்.ராகுல் 69 பந்துகளில் 132 ரன்கள் விளாசினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய கே.எல்.ராகுலின் அதிரடியான ஆட்டத்தால் பஞ்சாப் அணி 206 ரன்கள் குவித்துள்ளது.

ஐ.பி.எல் 13-வது சீசனின் 6-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தனி ஆளாக நின்று அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் இன்றையப் போட்டியில் 26 ரன்களில் சஹால் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அதற்கு அடுத்து களமிற்ங்கிய நிக்கோலஸ் பூரான் 17 ரன்னில் ஷிவம் துபே பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

மற்றொரு முனையில் பொறுப்புடன் விளைாயடிய கேப்டன் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சிதறவிட்டார். இறுதி ஓவர்களில் அதிரடியில் மிரட்டிய கே.எல்.ராகுல் சதம் விளாசி அத்தினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கே.எல்.ராகுல் 69 பந்துகளில் 132 ரன்கள் விளாசினார். இதையடுத்து பெங்களூரு அணி வெற்றி பெற 207 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: IPL 2020