விளையாட்டு

  • associate partner

பஞ்சாப் அணியின் ஆட்டத்தை பார்த்து சொந்த அணியையே கலாய்த்த ப்ரித்தி ஜிந்தா

ஐ.பி.எல் 2020 தொடரில் பஞ்சாப் வெற்றி பெற வேண்டிய 4 போட்டிகளில் நூழையில் அந்த அணி வெற்றியை தவறவிட்டது.

பஞ்சாப் அணியின் ஆட்டத்தை பார்த்து சொந்த அணியையே கலாய்த்த ப்ரித்தி ஜிந்தா
ப்ரித்தி ஜிந்தா
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடரின் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் ஆட்டம் குறித்து அந்த அணியின் உரிமையாளர் ப்ரித்தி ஜிந்தா கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.

ஐ.பி.எல் 2020 தொடரின் 31-வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் சிறப்பான அடிதளத்தை ஏற்படுத்தினர். மயங்க் அகர்வால் அவுட்டானதை தொடர்ந்து களமிறங்கிய கெயில் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.


பஞ்சாப் அணி எளிதாக வெற்றி பெற வேண்டிய நிலையில் இறுதி ஓவர்களில் சொதப்பியது. இதையடுத்து ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. கடைசி ஓவரில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சஹால் வீசினார்.

முதல் இரண்டு பந்துகளில் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் 3-வது பந்தில் ஒரு ரன்னும், 4-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல், 5-வது பந்தில் கே.எல்.ராகுல் ஒரு ரன் எடுக்க முயன்ற போது கெய்ல் ரன் அவுட்டானார். இதனால் போட்டியில் பரபரப்பான முடிவுக்கு சென்றது. ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்க வேண்டுமென்ற நிலையில் நிக்லோஸ் பூரான் களமிறங்கி கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.

இந்த போட்டியை பார்த்த பஞ்சாப் அணி ரசிகர்கள் பரபரப்பின் உச்சத்திற்கே சென்றனர். இந்த தொடரில் பஞ்சாப் வெற்றி பெற வேண்டிய 4 போட்டிகளில் நூழையில் அந்த அணி வெற்றியை தவறவிட்டது.இந்த போட்டிக்கு பின் பஞ்சாப் அணியின் உரிமைாயளரும் நடிகையுமான ப்ரித்தி ஜிந்தா தனது கருத்தை கேலியாக பதிவு செய்தார். அதில், கடைசியாக தேவைப்பட கூடிய ஒரு வெற்றியை பெற்று இருக்கிறோம். கிரிக்கெட் என்ற பெயரில் மக்களுக்கு நமது அணி ஹார்ட் அட்டாக் கொடுக்க கூடாது. பஞ்சாப் அணி விளையாடும் போட்டிகளை இதயம் பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம். பெங்களூரு பவுலர்கள் கடைசி நேரத்தில் ஆட்டத்தை மாற்றி போராடியதை பாராட்டுகிறேன், என்றுள்ளார்.ஐ.பி.எல் 2020 தொடரில் 8 போட்டிகளில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி அடுத்தப் போட்டியில் வரும் அக்டோபர் 18-ம் தேதி மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading